புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2013

மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஷிராணி பண்டாரநாயக்க
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, ஷிராணி பண்டாரநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக நீதிமன்றம் மற்றும் இலஞ்ச ஆணைக்குழுவில் நடைபெற்றும் விசாரணைகளில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து ஓரளவு நிவாரணம் பெறலாம் என அவரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் நீதியரசருக்கு எதிரான நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளில் அவருக்கு தண்டனை கிடைக்கக் கூடும் எனவும் இப்படியான சூழ்நிலையில் அரசியல் களத்தில் இருந்தால் அதனை அரசியல் பழிவாங்கலாக சமூகத்திற்கு முன் எடுத்துரைக்கலாம் என எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் இந்த விடயம் தொடர்பில் சாதகமான பதிலை வழங்கியதுடன் தேர்தலில் போட்டியிட விருப்பம் வெளியிட்டுள்ளார். எனினும் அவரது கணவர் உட்பட குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பு காரணமாக இறுதி தீர்மானம் எடுப்பதை அவர் பிற்போட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் இறுதி நேரத்திலாவது இணக்கத்திற்கு செல்ல முடியும் எனவும் தேர்தலில் போட்டியிடுவதால் அரசாங்கத்தின் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படலாம் என ஷிராணியின் கணவர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஷராணி பண்டாரநாயக்கவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் அதிக எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருக்கலாம் என ஏரான் விக்ரமரத்ன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ad

ad