புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2013

maha-prabaதமிழகத்திலிருந்து சென்ற வார இதழ் ஒன்றின் செய்தியாளர் கிளிநொச்சியில் வைத்து படையினரால் கைது செய்யப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற இடத்திலேயே இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில் கிராஞ்சி பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை
உறுப்பினர்கள் ஆகியோர் தம்முடன் குறித்த தமிழக பத்திரிகையாளரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.செல்லும் வழியில் சேதமடைந்து குன்றும் குழியுமாக இருந்த வீதியின் மோசமான நிலையினை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை படையினர் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் கிராமத்திற்குச் சென்று மக்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கு சென்ற படையினர், பத்திரிகையாளரான தமிழக பிரஜையை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. மகா தமிழ் பிரபாகரன் எனப்படும் அந்தச் செய்தியாளர் கடந்த வருடமும் இலங்கை சென்று இலங்கையின் நிலவரங்களை அவர் பணியாற்றும் பிரபல இதழில் எழுதியிருந்தார்.

கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அத்துடன் இந்தப் பத்திரிகையாளருடன் நின்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் காவற்துறை நிலையம் சென்றனர் ஆயினும் அவர்களின் புகைப்படக் கருவிகள் பரிசோதித்த பின் அவை ஒப்படைக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை விடுவிக்கப்படாது தொடர்ந்தும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுளார். அவர் நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்டப்டுள்ளது.

ad

ad