வைகோவுக்கு எதிராக போஸ்டர் :திருவாரூர் பரபரப்பு
திருவாரூர் மாவட்ட ம.தி.மு.க., செயலராக ரயில் பாஸ்கர் நியமிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, அதே பகுதியைச் சேர்ந்த முப்பால், மாவட்ட பொறுப்பாளராக, நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் பகுதியில் முப்பாலை பொறுப்பாளராக நியமித்த வைகோவிற்கு நன்றி தெரிவித்து, நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனுநீதி மண்ணில் மறுக்கப்பட்ட நீதி, உழைப்புக்கு உதாசீனம், பதவி வெறிக்கு சிம்மாசனம், தொண்டர்கள் உள்ளத்தில் ஆறா ரணம் என மொட்டையடிக்கப்பட்டவர் சங்கு ஊதுவது போன்ற படத்துடன் இப்படிக்கு, ம.தி.மு.க., உண்மை விசுவாசிகள் என, அச்சிடப்பட்டு, ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால், திருவாரூரில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, முப்பால் ஆதரவாளர்கள், ‘’கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரயில் பாஸ்கருக்காக தான், சிலர் இப்படி போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். பதிலுக்கு எங்களாலும் போஸ்டர் ஒட்ட முடியும். ஆனால், இப்படிப்பட்ட வீண் வம்புகளை தலைவர் வைகோ, விரும்புவதில்லை. அதனால் அமைதியாக இருக் கிறோம்’’ என்கிறார்கள்.