கோத்தபாயவின் செயற்பாடுகளை எதிர்க்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கொழும்பு நகரின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக கொழும்பு நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள காணிகளை சுவீகரித்து வருகிறார்.
காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த இராணுவ சீருடை அணிந்தவர்கள் அனுப்பி வைக்கப்பகின்றனர். இதனால் மக்கள் பீதியடையும் நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு இது பற்றி அறிவிப்பதற்காக சீருடை அணிந்த படை அதிகாரிகளை அனுப்பி வைப்பது தவறு என தெரிவித்துள்ளார்.
இராணுவ சீருடையில் இராணுவ நடவடிக்கையை போன்று சென்று இந்த செயற்பாடுகளில் ஈடுபடுவது மனிதசுதந்திரத்திற்கும், அடிப்படை உரிமைக்கும் முரணானது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது சம்பந்தமாக தான் அனுப்பிய கடிதம் ஒன்றுக்கு நகர அபிவிருத்தி அதிகாரச் சபை அர்த்தமற்ற பதில் ஒன்றை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் வாசு தெரிவித்துள்ளார்.