குஜராத் கலவரம்! நரேந்திர மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி! அஹமதாபாத் நீதிமன்றம் உத்தரவு!
குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் அம்மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராக ஜாகியா ஜாப்ரியின் என்பரின் மனுவை தள்ளுபடி செய்து அஹமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது குல்பார்க் சொசைட்டியில் 69 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட
69 பேரில் ஜாகியா ஜாப்ரியின் என்பவரின் கணவர் எசான் ஜாப்ரியும் ஒருவர். குல்பர்க் சொசைட்டி படுகொலையில் முதல் அமைச்சர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு உள்ளது என ஜாகியா ஜாப்ரி புகார் தெரிவித்தார்.இதையடுத்து நரேந்திர மோடிக்கு எதிரான புகார் பற்றி விசாரிக்க 2008ஆம் ஆண்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. நரேந்திர மோடிக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அளித்தது.
சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி அஹமதாபாத் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இதில், தனது கணவர் ஈசான்ஜப்ரி உயிருடன் எரித்து கொல்லப்பட்டார். இதில் மோடிக்கும், அவரது அரசுக்கும், அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு. எனவே மோடியை குற்றவாளியாக அறிவித்து வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரினார்.
இந்த மனுவை விசாரித்த அஹமதாபாத் மாஜிஸ்திரேட் கோர்ட், ஜாகியா ஜாப்ரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அஹமதாபாத் நீதிமன்றத்தின் உத்தரவு அதிருப்தி அளிப்பதாக ஜாகியா ஜாப்ரி தெரிவித்துள்ளார். மேலும், நரேந்திர மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறினார்.
அஹமதாபாத் நீதிமன்றத்தின் உத்தரவு அதிருப்தி அளிப்பதாக ஜாகியா ஜாப்ரி தெரிவித்துள்ளார். மேலும், நரேந்திர மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறினார்.
கொல்லப்பட்ட எசான்ஜாப்ரி காங்கிரஸ் கட்சியில் எம்.பி.,யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.