புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2013

மாணவியை கர்ப்பிணியாக்கிய பாதிரியார் நெல்லை சிறையில் அடைப்பு
திருநெல்வேலி பேட்டை புனித அந்தோணியார் பள்ளி தாளாளர் மற்றும் கத்தோலிக்க ஆலய பங்கு தந்தையாக இருந்தவர், ஞானப்பிரகாசம் செல்வன், 34. பிளஸ் 1 படிக்கும் மாணவியிடம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். 



மாணவி கர்ப்பிணியானார்; உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். பெற்றோரிடம், 25,000 ரூபாய் கொடுத்து, கருக்கலைப்பு செய்ய மிரட்டியுள்ளார். தனியார் மருத்துவமனையில், மாணவிக்கு கருக்கலைப்பு நடந்தது. சிசுவை, பேட்டை அருகே, குளத்துப்பகுதியில் புதைத்தனர்.


மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார், பாதிரியார் மீது, வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். புதைக்கப்பட்ட சிசு, தாசில்தார் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டது.

இந்நிலையில், பாதிரியார் ஞானப்பிரகாசம் செல்வன், உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண டைந்தார். நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, மதுரை சிறையில் இருந்து பாதிரியாரை, போலீசார், நெல்லை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
மாஜிஸ்திரேட் இசக்கியப்பன், ஜன., 9ம் தேதி, மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். போலீசார், அவரை நெல்லை சிறையில் அடைத்தனர்.

ad

ad