பிரிட்டனை தாக்கிய பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் பலியாகி உள்ளனர்.
ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து உட்பட பிரிட்டனை தாக்கிய புயலுக்கு, கடந்த 24ம் திகதி மட்டு
ம் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.
மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரிட்டனில் பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும் சாலையில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், திட்டமிட்ட நேர்த்தியான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரிட்டன் தேசிய நெடுஞ்சாலை ஏஜென்சியை சேர்ந்த பிராங்க் ஃபர்ட் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக லண்டன் கேட்விக் உட்பட பல விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெற்கு இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 1,50,000 அதிகமான வீடுகளில் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி கிடக்கின்றது.
இதுதவிர பிரான்ஸ், ஸ்பெயின் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பனி நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.
Cold and chaos as storm batters
|