நாட்டை இன்னும் 20 வருடங்களுக்கு ராஜபக்ஷ குடும்பமே ஆட்சி புரியும்
ராஜபக்ஷ குடும்பம் இன்னும் 20 வருடங்களுக்கு இந்த நாட்டை ஆட்சிபுரியும். ஐ. தே. க. எவ்வளவுதான் தலைகீழாக நின்றாலும் இதனை மாற்ற முடியாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாய் மூல விடைக்காக பி. ஹெரிசன் எம். பி. எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
2016 டிசம்பர் ஆகும் போது ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுக்கும் 3 மஹிந்தோதய பாடசாலைகள் நிர்மாணிப்பதாகக் குறிப்பிட்டார். இடையீட்டுக் கேள்வி ஒன்றை முன்வைத்த பி. ஹெரிசன் எம்.பி. 2016 ஆகும் போது நீங்கள் கல்வி அமைச்சராக இருப்பீர்களோ தெரியாது. இந்த டிசம்பர் ஆகும் போது ஐ. தே. க. ஆட்சியே வரப்போகிறது என்றார்.
இதற்குப் பதில் வழங்கிய அமைச்சர், மஹிந்த சிந்தனையின் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவம் வழங்கி வருகிறார். எனவே இன்னும் 20 வருடங்களுக்கு ராஜபக்ஷ ஆட்சியே இருக்கும் என்றார்.