புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2014

சிங்கள மொழி மாத்திரமின்றி தமிழ் மொழியும் தாய் மொழியாகும்: வாசுதேவ

இலங்கையில் சிங்கள மொழி மாத்திரமின்றி தமிழ் மொழியும் தாய் மொழியாகும். எனவே இந்நாட்டில் இரண்டு தாய் மொழிகள் உள்ளன. அவற்றை கற்று சமூக மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார். 
அரச கரும மொழிகள் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 
இந்நாட்டில் நிலைகொண்டுள்ள இனப்பிரச்சினைக்கு மொழியே பிரதான காரணமாகும். இந்த வைபவத்தில் தமிழ் மொழியில் சித்தியடைந்த சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியில் உரை நிகழ்த்தினர். 3 தமிழ் பாடல்களுக்கு நடனமாடினர்.
இருப்பினும் கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமை காணப்படவில்லை. இதன் காரணமாகவே இனப்பிரச்சினைக்கான சூழல் அதிகரிக்கப்பட்டது. 
வடக்கு தமிழர்களுக்கு சிங்களம் தெரியாது தெற்கு சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாது. இதன் காரணமாக நாடு மொழி ரீதியாக இரண்டாக பிளவு பெற்று காணப்பட்டது. அதுமாத்திரமின்றி வரலாற்றில் இனப்பிரச்சினை தோன்றியமைக்கும் மொழியே காரணம் என்பது இரகசியமல்ல. 
எனவே மொழி ரீதியாக பிளவுபெற்ற இந்நாட்டை அதனூடாக ஐக்கியப்படுத்த வேண்டும். ஆகவே இந்நாட்டை மொழி கலாசார பண்பாடுகளினூடாகவே இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். 
இனங்களுக்கிடையே இத்தகைய மாற்றத்தினை பாடசாலையினூடாக ஏற்படுத்தினாலேயே எதிர்காலச் சந்ததியினால் இன ரீதியாக பிளவுபடாமல் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ்வர். 
நமது சமூகம் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் வழங்குவதனை போன்று தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இந்நாட்டில் சிங்கள மொழி மாத்திரமின்றி தமிழ் மொழியும் தாய் மொழியாகும். எனவே இந்நாட்டில் இரண்டு தாய் மொழிகள் காணப்படுகின்றன. ஆகவே மொழியினூடாகவே சமூக மாற்றத்தினை வித்திட முடியும் என்றார்.

ad

ad