கனடா பெண்களுக்கான கொக்கி விளையாட்டில் வெற்றி
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெறுகின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவிலிருந்து சென்ற குழவானது பெண்களுக்கான கொக்கி விளையாட்டில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு நாடகப் ;பாணியில் நடைபெற்றுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
கனடியப் பெண்கள் குழுவானது அபாரமான வகையிலும், ஆச்சரியப்படத்தக்க வகையிலும் விளையாடியுள்ளது எனவும் ஊடகங்கள் தெரிவித்திருப்பதாகத் தெரியவருகிறது.