புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2014


மிழர்களிற்கு எதிராகப் பிரசாரம் செய்ய அனுப்பப்பட்டவர் கனடிய அரசில் வேலை?
ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது சிறீலங்கா அரசால் கனடாவிலுள்ள தமிழர்களிற்கு எதிரான பிரசாரத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலங்கைத் தூதுவராலயத்திற்கு
அனுப்பப்பட்ட நபர் தற்போது கனடாவின் பாராளுமன்றத்தில் வேலை செய்யும் விடயம் அம்பலமாகியுள்ளது.
தமிழர்களிற்கெதிரான பிரசார உத்திக்காகவென விசேடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஊடகம் சார்ந்த நபர் தனது தூதரகப் பதவிக்காலத்திலேயே கனடிய அரசியல்வாதிகளிற்கு அந்நியோன்யமாகி அதனூடான தொடர்பு ஊடாக ஒரு முக்கிய ஆளும்கட்சி உறுப்பினரின் பிரதம பாராளுமன்றச் செயலாராகப் பணியாற்றி வருகின்றார்.
அண்மையில் கனடாவைப் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரதிநிதித்துவப் படுத்திய பாராளுமன்ற உறுப்பினரான டீபக் ஒபராயின் பாராளுமன்ற அலுவலகத்தில் வேலை பார்க்கும் மேற்படி இலங்கை இராஜதந்திரியாக கனடா வந்த மேற்படி நபர் அப் பதவியை எவ்வாறு பெற்றார் என்பது பெரும் கேள்விக் குறியாகவுள்ளது.
கொழும்பிற்கான ரொய்ட்டர் செய்தியாளராகப் பணியாற்றிய இவரது திறமை காரணமாக இவரை சிறீலங்கா அரசு தனது இராஜதந்திர சேவையில் இணைத்து கனடாவிற்கு அனுப்பியிருந்தது. இருந்தபோதும் இவரது கனடாவிற்கான நியமனம் தமிழர்களிற்கு எதிரான பிரசாரத்திற்காகவே என்பது பற்றிய தகவல்களை இணையத்தளமொன்று ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தது.
எனினும் தனது பத்திரிகை தொடர்பாடல்களின் போது தான் 2005ம் ஆண்டே கனடா வந்த நபராக இவர் குறிப்பிட்டு தான் ஒரு இலங்கை இராஜதந்திரியாக கனடாவிலுள்ள தமிழர்களிற்கெதிராகப் பிரசாரம் செய்ய அனுப்பப்பட்ட நபர் என்பதை இன்றுவரை மறைத்து வந்துள்ளார்.
இந் நிலையில் தமிழர்களிற்கு ஆதரவாக செயற்படும் தோற்றத்தையுடைய ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பிரதம செயலர் இலங்கை அரசின் இராஜதந்திரியாக இருந்தவர் என்பது பலருக்கும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றச் செயலாராகப் பணியாற்றியபடியே கப்பலில் வந்த அகதிகள் சம்பந்தமான பக்கசார்பான கருத்துக்களை ஒட்டாவா சிற்றிசன் என்ற பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் இவர் எழுதி வெளியிட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ad

ad