புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2014


அனைத்துலக விசாரணை உள்ளடக்கப்படுமா? அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானம் வரையும் 4 நாடுகள்
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானத்தில் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறை உள்ளடக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக வலுத்துவரும் நிலையில், அமெரிக்காவுடன் கூட்டாக நான்கு நாடுகள் இணைந்து இத்தீர்மானத்தினை வரையத் தொடங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய ராஜ்ஜியம், சியரலியோன், மசிடோனியா மற்றும் மண்டினீக்ரோ (United kingdom, Sierra Leone, Macedonia and Montenegro )ஆகிய நாடுகளே அமெரிக்காவுடன் கூட்டிணைவாக பங்கெடுத்துள்ளன.
இதேவேளை ஐநா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை அடியொற்றியே இத்தீர்மானம் அமையும் எனத் தெரிவித்துள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர்
ஒருவர், அது முழுமையாக அதைனை அடியொற்றி இருக்காதெனவும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தொடர்பிலான அமெரிக்காவின் வரும் மூன்றாவது தீர்மானத்துக்கு , 40 நாடுகள் இணை அனுசரணை வழங்கும் என எதிர்பார்கப்படுகின்றது.
2012ம் ஆண்டு கொண்டு வந்த தீர்மானத்துக்கு 40 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்த அதேவேளை, 2013ம் ஆண்டில், 41 நாடுகள் இணை அனுசரணை
வழங்கியிருந்தன.
வரும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது கூட்டத்தொடரின் இறுதிநாளான மார்ச் 28ம் நாள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ad

ad