புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2014

புக்கிகளுக்கு ரகசியமாக தகவலளித்த குருநாத் மெய்யப்பன்

ஐபிஎல் 6வது சீசனின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய விபரங்களை குருநாத் மெய்யப்பன் புக்கிகளுக்கு வழங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
ஐபிஎல் 6வது சீசனின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசனின் மருமகனும், அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையில் மெய்யப்பன் அணி குறித்த தகவல்களை புக்கிகளுக்கு தெரிவித்தது தெரியவந்துள்ளது, அவர் நடிகர் வின்டு தாரா சிங் மூலம் பெரிய தொகையை பெட் கட்டியுள்ளார்.
மெய்யப்பன் செல்போன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை பயன்படுத்தி வின்டுவை தொடர்பு கொண்டுள்ளார், அவர்கள் பேசிய விவரம் விசாரணை குழுவிடம் உள்ளது.

மெய்யப்பன் ஐபிஎல் 6வது சீசனின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் றொயல்ஸ், றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகள் விளையாடிய போட்டிகளின்போது பெரும் தொகையை பெட் கட்டியுள்ளார், அவர் வின்டு மூலமாக தான் பெட் கட்டியுள்ளார்.
வின்டுவுடன் சேர்ந்து மெய்யப்பன் போட்டி முடிவுகளை கணித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் 12ம் திகதி அவர் வின்டுவுடன் பேசுகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்த தகவலை அளித்துள்ளார்.
அதே நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றொயல்ஸ் போட்டி குறித்த தகவலையும் மெய்யப்பன் வின்டுவிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை அணி 130 முதல் 140 ஓட்டங்கள் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மே 14ம் திகதி போட்டியின்போது சென்னை அணியில் யார் யார் எந்தெந்த வரிசையில் விளையாட வருவார்கள் என்ற விவரத்தையும் அளித்துள்ளார்.

ad

ad