-

19 டிச., 2014

 வட இந்திய மாநிலங்களில் அதிகளவு பனிப் பொழிவு இருப்பதால் குளிர் தாங்காமல் 30 பேர் பலியாகி உள்ளனர்.
காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட் உள்ளிட்டவற்றில் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப் பட்டுள்ளது. காஷ்மீரின் பல பகுதிகளில் குளிர் நிலை மைனஸ் டிகிரியை அடைந்துவிட்ட நிலையில், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்டவற்றில் வெப்ப நிலை 6.6 என்ற அளவில் உள்ளது.

காலை வேளைகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. 9 மணியளவில்தான் பல வட மாநிலங்களில் சூரிய வெளிச்சம் பரவ ஆரம்பிக்கிறது.

சில மாநிலங்களில் இரவு நேரங்களில் வெப்பநிலை 5 டிகிரிக்கும் குறைவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ad

ad