புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

ஜெயலலிதாவின் பிணையை மேலும் நீடித்தது நீதிமன்றம்
இந்தியாவில் நடப்பாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் (அம்மா)  செல்வி ஜெயலலிதா ஜெயராம் தொடர்பான சொத்துக் குவி ப்பு வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு  வழங்கப்பட்ட  நான்கு பேரின் பிணைக்காலம் மேலும் நான்கு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல் வர் ஜெயலலிதா,  சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் மேலும் 4 மாத காலம் பிணை நீட்டித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்கர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 27ஆம் திகதி தீர்ப்பளித்தது.

ஜெயலலிதாவின் பிணை மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி பிணை வழங்கியது.

மேலும் டிசெம்பர் 17ஆம் திகதிக்குள் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறை யீடுக்கான அனைத்து ஆவணங்களையும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மேல் முறையீடு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, கடந்த 8ஆம் திகதி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு தொடர்பான சுமார் 2.15 இலட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

வழக்கை  விசாரித்த நீதிபதிகள் சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் மேலும் 4 மாத காலம் பிணை நீட்டிக்கப்படு கிறது.

ஜெயலலிதாவின் மேல்முறை யீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும்.

மேல்முறையீட்டு மனு விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். வழக்கு விசாரணை தினசரி மேற் கொள்ளப்பட வேண்டும்\"என உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.        

ad

ad