புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

தமிழ்க் கட்சிகள் கவனிக்காத வேட்பாளர் நியமனங்கள்
தனி மனித ஆளுமைகள் இந்த உலகில் சாதித்தவை ஏராளம். இதன் காரணமாகவே உலக வரலாற்றில் சில தனி மனிதர்கள் மகா மேதைகளாக, தத்துவ ஞானிகளாக, விந்தை மிகு மனிதர்களாகப் போற்றப்படுகின்றனர்.

அமெரிக்க நாட்டின் ஆபிரகாம்லிங்கன், இந்திய தேசபிதா மகாத்மா காந்தி, அன்னை திரேசா, தத்துவஞானி சோக்கிரட்டீஸ், சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் உதாரணத்திற்கு முன்னிறுத்தப்படக் கூடியவர்கள்.

எனவே தனித மனித ஆளுமைகள் மிகவும் முக்கியமானவை என்பதை இதில் இருந்து உணர முடியும்.

எனினும் எங்கள் அரசியலில் தனி மனித ஆளுமைகளுக்கு நிறைந்த பஞ்சம் இருப் பதை உணரமுடிகிறது.

சேர்.பொன் இராமநாதன், சேர்.பொன் அருணாசலம், தந்தை செல்வநாயகம், தளபதி அமிர்தலிங்கம், சட்டமேதை ஜீ.ஜீ.பொன்னம்பலம், அடங் காத்தமிழன் சுந்தரலிங்கம், இரும்பு மனிதன் நாகநாதன் போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள் எங்கள் இனத்தின் பெருமைக்கும் கெளரவத்திற்கும் காரணமாக இருந்தனர்.

இவர்களை சிங்களத் தலைவர்களும் மிக உயர்ந்த அரசியல் தலைவர்களாகக் கருதினர்.

உரிய மதிப்பையும் அளித்தனர். இவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றுகின்ற உரைகளுக்கு நிறைந்த பெறுமதி கொடுக்கப்பட்டது.

இவர்களைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உலகத் தமிழர்களின் வீரத்தலைமகனாக கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டார். அந்தப் போற்றுகை இன்று உலகம் முழுமையிலும் நிதர்சனமாகியுள்ளது.


எனினும் எங்கள் இனத்தில் கெடுகாலமாக தற்போது தமிழ் அரசியல் தலைமையில் ஒரு பெரும் இடைவெளி ஏற்பட்டுப்போயுள்ளது. 

ஆம், காலத்திற்குக் காலம் மிகச் சிறந்த தமிழ் அரசியல் தலைவர்கள் நேர்மைத்திறத்துடன் இருந்து நிர்வாகம் நடத்திய போதிலும் தற்போது நல்ல-நேர்மையான-உலகம் போற்றக்கூடிய ஆற்றல் மிக்க தமிழ்த் தலைவர்களுக்கு எமது அரசியலில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது.

இதன் காரணமாக எவரும் அரசியலில் நுழையலாம் என்ற நிலைமை உருவாகிற்று.  எனக்குத் தெரிந்தவரை; எனக்காக வாக்குக் கேட்கக் கூடியவரை; எனக்காகப் பிரசாரம் செய்யக் கூடியவரை; எனது குடும்ப உறுப்பினரை அரசியலில் ஈடுபடுத்துவதே எனது நலனுக்கு நல்லது என்று நினைத்த போது- அதனை அமுலாக்கிய போது புத்திஜீவிகள், தமிழ் பற்றுள்ளவர்கள், விசுவாசமானவர்கள் ஓரம் கட்டப்பட்டனர். 

இதன் காரணமாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளாக எவரும் வரலாம் என்றாயிற்று. இதன் விளைவு கூட்டங்களில் ஒப்பாரி, சண்டை சச்சரவு, குழப்பம், குத்துவெட்டு என்ற கேவலங்கள் அடிக்கடி அரங்கேறுவது தவிர்க்க முடியாததாகின்றது. 

தமிழ் அரசியல் தலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு தமிழ் மக்கள், உலகம் மதிக்கக் கூடிய ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை வடக்கின் முதல்வராக்கி தமிழ் அரசியல் தலைமையை பலமாக்கப்பாடு பட்டபோது, முதலமைச்சருக்கு கை ஓங்கிக்  காட்டும் காட்டுமிராண்டித்தனங்கள்; அவரை அவமதிக்கும் உரைகள், ஒரு கெளரவமான மனிதனால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையை தோற்றுவித்து விடுகிறது.

எனவே அடுத்த தேர்தலில் காட்டுமிராண்டித் தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ் மக்கள் தயங்கினால் எங்கள் எதிர்கால நிலைமை படுமோசமாகி விடும்
.

ad

ad