புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

8000 தீவிரவாதிகளுக்கு பாக். தூக்குத் தண்டனை! பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவு
பாகிஸ்தானில் இராணுவப் பாடசாலையில் தலிபான் தீவிரவாதிகள் ஆடிய வெறியாட்டத்தால் 141 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக அந்நாட்டில் தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 ஆயிரம் பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்க அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

தீவிரவாத சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் மரண தண்டனைக்கு விதிக் கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் நேற்று முன்தினம் விலக்கிக் கொண்டது .பெஷாவர் நகரில் இராணுவம் நடத்தும் பாடசாலை ஒன்றில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து 132  மாணவர்கள் உட்பட 148 பேரை கண் மூடித்தனமாக சுட்டுக்கொன்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அமைச்சர்கள் குழு அளித்த ஆலோச னையின் பேரில் இத்தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்தார்.

இதன் மூலம் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள தீவிரவாதிகளின் தண்டனை இனி நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவா தம் தொடர்பான குற்றங்க ளில் மரண தண்டனைக்கு 2008 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

நவாஸ் ஷெரீப் அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இத்தடையை நீக்க விரும்பியது. ஆனால் சர்வதேச அளவிலான நிர்ப்பந்தம் காரணமாக இம்முடிவை நவாஸ் ஷெரீப் பின்னர் கைவிட்டார்.

ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான சலுகை வர்த்தக ஒப்பந்தம் இரத்தாகும் என்ற அச்சத்தாலும் நவாஸ் ஷெரீப் இத்தடையை நீக்கவில்லை.

உள்துறை அமைச்சக புள்ளி விபரப்படி பாகிஸ்தானில் 8 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தடை காரணமாக தண்டனை நிறைவேற்றப் படாமல் உள்ளனர்.

பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக அரசுக்கும் இராணுவத்துக்கும் நெருக்குதல் அதிகரித்துள்ள நிலையில், இத் தடை நீக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமை யில் பெஷாவர் நகரில்  அனை த்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் பெஷாவர் தாக்குதல் மட்டுமன்றி நாடு எதிர்நோக்கியுள்ள பிற சவால்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.

இக்கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேசும்போது, “இந்தத் தாக்குதல் காட்டு மிராண்டிகள் கட்டவிழ்த்து விட்ட தேசிய துயரம்.

நமது குழந்தைகளின் தியாகம் வீணாவதை அனுமதிக்க மாட்டோம். தலிபான்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித பலனும் ஏற்படவில்லை.

தீவிரவாதத்தை எதிர்த்து பாகிஸ்தான் நீண்டகாலமாக போரிட்டு வருகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.

தற்போது சிறையிலுள்ள தீவிரவாதத்துடன் தொடர் புடைய 8 ஆயிரம் தீவிரவாதிக ளுக்கும் மரண தண்டனை விதிக்கப்படும் “தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட எல்லா கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்ற
ன.

தீவிரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்கான வழிமுறைகள் இந்த கூட்டத்தில் விவாதிக் கப்படும்” என்றார்.
 

ad

ad