புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

சந்தேக நபர்களை பிரதியமைச்சர் சொந்த வாகனத்தில் ஏற்றி நீதிமன்றிற்கு அழைத்துச் சென்றார்?
சந்தேக நபர்களை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம சொந்த வாகனத்தில் ஏற்றி நீதிமன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வந்துராம்ப என்னும் இடத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார மேடையொன்று சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்த மூன்று சந்தேக நபர்களையும் பிரதி அமைச்சர் தனது சொந்த ஜீப்பில் நீதிமன்றிற்கு அழைத்துச் சென்றதாக வந்துராம்ப பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பொலிஸ் ஜீப் வண்டியில் நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டு முன்னிலைப்படுத்தப்படுவதே வழமையான நடைமுறையாகும்.
எனினும் பிரதி அமைச்சர் பலவந்தமான அடிப்படையில் சந்தேக நபர்களை பொலிஸாரிடமிருந்து மீட்டு, சொந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.
தென் இந்திய திரைப்படக் காட்சிகளைப் போன்று இவ்வாறு பிரதி அமைச்சர் சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
இதேவேளை, பிரதி அமைச்சரின் நடவடிக்கையானது சட்டவிரோதமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் நடவடிக்கைகளை நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது முத்துஹெட்டிகம கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதி அமைச்சரின் இந்த நடவடிக்கை தொடர்பில் எவ்வாறான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

ad

ad