-

19 டிச., 2014

தமிழக மேலிட பொறுப்பாளரை இன்று சந்தித்து பேசிய பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், பா.ஜ.க.வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மறைமலைநகரில் நாளை நடக்க உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் அகில இந்திய தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறார்.


இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரும், இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் இன்று காலை தமிழக பா.ஜ.க அலுவலகமான கமலாலயம் வந்தார்.
அப்போது, தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் ஆகியோர் அவரை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து இருவருக்கும் அவர் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.

திரையுலகமே என்றிருந்த கங்கை அமரன் திடீரென பா.ஜ.க தலைவர்களை சந்தித்து பேசியுள்ள நிலையில். நாளை தமிழகம் வரும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா முன்னிலையில், கங்கை அமரன் அக்கட்சியில் இணைந்து கொள்வார் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிகின்றன.

ad

ad