புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

ஆணவங்களின்றி ரூ. ஒரு கோடி மதிப்பிலான கிரானைட் கற்களை ஏற்றி வந்த 15 லாரிகள் பறிமுதல்
சென்னை அருகே உரிய ஆணவங்கள் இல்லாமல் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்களை ஏற்றி வந்த 15 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிரானைட் ஏற்றி வந்த லாரிகளை திருவள்ளுர் மாவட்டம் மாதவரத்தில், வட்டாச்சியர் சரளாதேவி காவல்துறையினரின் உதவியுடன் ஆய்வு செய்தார். இதில் ஆந்திர மாநிலம் வாரங்கலில் இருந்து,  திருவேற்காடு பகுதிக்கு கிரானைட் கற்களை கொண்டு வந்ததும், பின்னர் கள்ளச் சந்தையில் அவற்றை விற்பதற்காக ஏற்றிச் சென்றதும் தெரிய வந்தது. 

இதையடுத்து லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, மாதவரம் பால்பண்ணை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. அங்கிருந்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ஒப்பந்ததாரர் வாகன நிறுத்ததிற்கு லாரிகள் கொண்டு செல்லப்பட்டன. 

ad

ad