புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

சுவிற்சர்லாந்தில் உலக அமைதிக்கும் மத நல்லிணக்கத்துக்குமான பல்சமய இல்லத்தின் (சர்வமத பீடத்தின்) தோற்றம
சுவிற்சர்லாந்தின் தலைநகரமான பேர்ண் மாநிலத்தில் முதற் தடவையாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் நெறிப்படுத்தலுடனும்
ஒத்துழைப்புடனும் முதலாவது Haus der Religion என்றழைக்கப்படும் சர்வ மத பீடம் தோற்றம்பெற்றுள்ளது.
இப் பீடத்தின் திறப்பு விழாவும் அறிமுகமும் 14.12.2014 அன்று நடைபெறுகின்றது. இந் நிகழ்வினை பேர்ன் மாநில நகர பிதாவும், சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் சிறப்பமைப்பாளர்களும் பல்லின மதங்களின்தலைவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கும் பண்பாடுகளுக்கிடையிலான கலந்துரையாடலுக்குமான ஓர் தேசிய, சர்வதேச அரங்காக இச் சர்வமத பீடமானது தோற்றங்கொள்கிறது.
மனித இனம் மதங்கள், பண்பாடுகளால் பிரிவடைந்து மோதுகைகளுக்கும் போர்களுக்கும் முகங்கொடுக்கும் ஓர் அவல நிலையைப் போக்கி மானிட நாகரிகத்தினதும் மனிதநேயத்தினதும் வளர்ச்சிக்கான ஓர் அரங்காக இச்சர்வ மத பீடம் அமைந்திருக்கும்.
குறிப்பாக சுவிற்சர்லாந்து நாடு சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், சர்வதேச மனித நேயச் சட்டங்களின் காப்பு நாடாகவும் அதனை நடைமுறைப்படுத்தும் உலக அமைப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஓர் தனித்தன்மையுள்ள ஓர் நாடாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும்.
இதன் பின்னணியில் இன்று பல்சமய இல்லத்தின் (சர்வ மத பீடத்தின்) உருவாக்கமும் முக்கியத்துவம் பெறுகிறது.
இவ்வாறானதோர் சூழலில் சுவிற்சர்லாந்து அரசின் ஐரோப்பாத்திடல் திட்டம் மற்றும் பல்சமய இல்லத்தின்  நிலையான பங்களாராகவும் உறுப்பினராகவும் உள்ள சைவ நெறிக்கூடத்தின்  ஞான லிங்கேசுவரர் திருக்கோவில் கருவறையில் செந்தமிழ் வழிபாட்டையும்  சைவத்தையும் ஒழுகும் முதல் தமிழ் சிவவழிபாட்டு ஆலயமாக தோற்றங்கண்டுள்ளது.
எமது மொழி, பண்பாடு, தேசியம், சைவ சித்தாந்த ஆன்மீக விழுமியங்களைப் பிரதிநித்துவப்படுத்தும்,  பிற இன மத மக்களுக்கு எடுத்துரைக்கும் முதலாவது இந்நாட்டின் அங்கீகாரங் கொண்ட திருக் கோவிலாக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் வளர்ச்சியடைந்துள்ளமை இந்நாட்டில் வாழ்ந்துவரும் பல ஆயிரம் சைவத் தமிழ் மக்கள் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் சைவத்தமிழ் மக்களும் பெருமை கொள்ள வேண்டிய வேளையாகும்.
பல சவால்களைத் தாண்டி தோற்றம் பெற்றிருக்கும் இத் தனித்துவமான சிவன்கோவிலின் வரலாற்றுப்பணிகளை முன்னெடுத்துச் செல்வது உலகெங்கும் வாழும் அனைத்து சைவத் தமிழ் மக்களினதும் கடமையாகும்.
தமிழ்ச் சித்தர்களால் ஈழத்தில் பூசிக்கப்பட்டுவந்த பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட படிகலிங்கம் ஞானலிங்கேச்சுரராக இத்திருச் சிவன்கோவிலில் எழுந்தருள்ளியுள்ளார்.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு சிந்துவெளி நாகரிகத்தில் தோற்றம் பெற்ற, சைவத் தமிழ் வழிபாட்டு முறைமை இன்று மீளவும் புத்துயிர்ப்படைந்துள்ளமை, உலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களால் பேணிப் போற்றி ஊக்கமளிக்கப்பட வேண்டிய ஓர் பெரும் வரலாற்று நிகழ்வாகும்!
தனது தமிழ்ச் சைவ வழிபாட்டினை மையமாகக் கொண்டு எமது சைவ சித்தாந்த ஆன்மீகப் பாரம்பரியத்தினையும் ஐ.நாடுகள் சபையினால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் மொழியின் ஒப்பியல் இலக்கியச் செழுமையையும் பிற மத இன பண்பாடுகளுக்கு விளக்கமளிக்கும் ஓர் அங்கீகாரம் கொண்ட சைவத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திருக்கோவிலாக ஞானலிங்கேச்சுரர் கோவில் எழுந்து நிற்பது, நாமனைவரும் பெருமைகொள்ள வேண்டிய ஓர் பெரும் மாற்றமாகும்.
சைவத் தமிழ் வழிபாட்டு ஆன்மீகப்பணிகளுடன், இத் திருச்சிவன்கோவில் சைவ சித்தாந்த மற்றும் தமிழ் இலக்கிய நூல்கள், ஆவணங்களை பேணிப்பாதுகாப்பதையும் தமிழ் மற்றும் பிற மொழிகளில் பட்டறைகள், விரிவுரைகளை மேற்கொள்வதையும் முதன்மைப்படுத்தியுள்ளது.
இறையியல், சைவத் தமிழ் ஆன்மீகப் பாரம்பரியம் தொடர்பான கல்வி அமைப்புகளுடனும் பல்கலைக்கழகங்களுடனும் தனது தொடர்புகளை வலுப்படுத்தி எமது ஆன்மீக மற்றும் தமிழ் மொழியின் சிறப்புகளை வெளிக்கொணரும் பணிகளையும் தன்னுள் ஞனாலிங்கேச்சுரர் திருக்கோவில் வரித்துக்கொண்டுள்ளது.
இதன் ஓர் அங்கமாக தற்போது சர்வ மதபீடத்தின் நல்கையுடன் பேர்ண் மாநில உயர் கற்கை நெறிகளுக்கான கல்லூரியுடன் இணைந்து மதங்களுக்கிடையிலான கலந்துரையாடலையும் நல்லிணக்கத்தையும் மையமாகக் கொண்ட சமூகப் பணிகளுக்கான கற்கை நெறியை வழங்கிவருகின்றது.
இந்நாட்டில் பிற நாட்டு இனம், மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்நாட்டு தூதுவராலயங்கள், இச்சர்வமத பீடத்தில் உறுப்பு வகிக்கும், தம் மத இன மக்களுக்கு உறுதுணையாகநின்று ஆதரவளித்து நிற்கையில் நாமோ தனித்து நின்று எமது ஆன்மீக, மொழி  பண்பாட்டுப் பெருமைகளை எடுத்துரைக்கும் பிரதிநிதித்துவப்படுத்தும் திருக்கோவிலாக விளங்குகின்றோம்.
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் வளர்ச்சிக்கான பணத் தேவைகள் மற்றும் சமூக ஆன்மீகப் பணிகளை இந்நாட்டு வாழ் மக்கள் மட்டுமல்லாது பல்நாட்டு அளவில் சைவத் தமிழ் மக்கள், அமைப்புகள் அனைவரும் முன்னெடுத்து ஆதரளிக்க வேண்டியமை ஓர் வரலாற்றுக் கடமையாகும்.
பல்லின மத மக்களின் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வெளிப்படுத்திநிற்கும் இச்சர்வ மத பீடத்தில், சைவ நெறிக் கூடத்தின் ஞானலிங்கேச்சுரர் தனது இராசகோபுர முடியில் தாய்த் தமிழில் சைவம் வளர்த்த நான்கு நாயன்மார்களின் உருவச்சிலைகள் எழுந்து நிற்க, கருவறையில் செந்தமிழ் வழிபாட்டையும்  சைவத்தையும் ஒழுகும் முதல் சிவன்கோவிலாக எழுந்தருளுகின்றார்.
இது தொடர்பாக இணையத்தில் வெளிவந்த ஏனைய ஊடகங்களின் செய்தி இணைப்பு இங்கே:
ஐரோப்பாத்திடல் கடந்த 14. 12. 2014 ஞாயிற்றுக்கிழமை பல் சமயத்தலைவர்கள், அரசயியற் தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் நடுவில் கோலாகல விழாவுடன் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வினை ஒட்டி ஒரு வருடமாக சுவிஸ் அரச தொலைக்காட்ச்சி இ;த்திட்டதினை ஆவணப்படமாக்கியிருந்தது. இந்நிகழ்வு எதிர்வரும் 7நாட்களுக்கு இணையத்தில் இங்கு தரவவேற்றப்பட்டடிருக்கும் இணைப்பினைச் சுட்டிப் பார்வையிடலாம்.
இவ் ஆவணப்படத்தில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் கட்டுமானத் திருப்பணி வேலைகளும் ஆவணப்படுத்தப்பட்டடுள்ளது சைவத்தமிழ் மக்களுக்குப் பெருமை அளி;ப்பதாகவும், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் வரலாற்றில் ஒரு பதிவாகவும் உள்ளது.

ad

ad