புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

பாதீனியம் உள்ள காணி உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை என்கிறார் : விவசாய அமைச்சர் 
யாழ்.மாவட்டத்தில் பாதீனியங்கள் உள்ள  காணி உரிமையாளர்களது மீது கடுமையான சட்ட நடவடிக்கை  எடுக்கப்படவுள்ளதாக விவசாய
அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
 
 
இன்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையில் 2015 ஆம் ஆண்டுக்கான விவாசய அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
 
மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பாதீனியச் செடிகளை முற்றும் முழுதாக அழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்  இதனால் காணிகளின்  பாதீனியச் செடிகள் காணப்படின் குறித்த காணி உரிமையாளர்கள் விவசாயத்  திணைக்களங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு தெரிவிக்காமல் விவசாயத் திணைக்களங்களது சோதனை நடவடிக்கையின் போது காணிகளில் பாதீனியச் செடிகள் காணப்பட்டால் குறித்த காணி உரிமையாளர்களுக்கு  6 மாத சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபா அபராதத்துடன்  கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ad

ad