புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

ரசிகனே வேண்டாம்! விஜய் தடாலடி!
த்தி திரைப்படத்தின் 50-வது நாள் விழா விஜய் தலைமையில் திருநெல்வேலியில் நடைபெற்றது. விவசாயத்தைப் பற்றி பேசிய கத்தி திரைப்படத்தின் 50-வது நாள் விழா திருநெல்வேலியில் தான் நடைபெறவேண்டும் என விஜய் விரும்பினாராம். 

v

’வெற்றி-தோல்வி இடையே சிறிய வித்தியாசம்தான் உள்ளது.கடமையை சரியாக செய்தால் வெற்றி. கடமைக்காக செய்தால் தோல்வி. நமது எதிரிகள் வேற மாதிரி பேசினால் நாம் வேற மாதிரி பேச வேண்டும். எதிரிகளை அவர்களது போக்கிலேயே விட்டு வெற்றி காண வேண்டும்’ என சில பல பஞ்ச் டையலாக்குகளை பேசிவிட்டு ‘குடும்பத்தைப் பற்றி எவ்வித கவலையுமில்லாமல், எனக்கு ரசிகனாக மட்டுமே இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அம்மா, அப்பா, வேலை தான் முதல்ல. என் படத்த மட்டும் பாத்து குடும்பத்த காப்பாத்தாத ரசிகன் எனக்கு வேண்டாம்’ என்று முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசினார்.

மேலும் விழாவின் போது விஜய்யின் பிரம்மாண்ட பேனருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்ததை கண்டித்து தனது டுவிட்டரில் ”இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாமென எனது ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்ற ட்வீட் ஒன்றையும் பதிவு செய்திருக்கிறார் விஜய். 

ad

ad