புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2015

நில விடுவிப்புக்கு செயற்குழு: 3 வாரங்களில் தீர்வு

வலி.வடக்கில் 1000 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

 
 
இன்னும் 3 வாரங்களுக்குள் குறித்த செயற்குழுவினால் நிலப்பரப்பு விடுவிப்பு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
 
 
இன்று காலை மீள்குடியேற்ற அமைச்சருக்கும் வடக்கு ஆளுநர் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும்  இடையில் காணி விடுவிப்பு ,மீள்குடியேற்றம்  தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று வடக்கு மாகாண ஆளுநரின்  அலுவலகத்தில் இடம்பெற்றது.இதன்போதே குறித்த செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
 
 
இது குறித்து மீள்குடியேற்ற அமைச்சர்  ஊடகவியலாளர்களுக்க கருத்து தெரிவிக்கையில்,
 
இன்னும் 3 வாரங்களில் நிலப்பரப்பு விடுவிக்கப்படும் என்றும் மாதிரிக் கிராமம் என்ற திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும்
அமைச்சர் தெரிவித்தார்.

ad

ad