கடந்த காலங்களில் ஈ.பி.டி.பியினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எங்கே என கோசங்களை எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் காணாமல் போனவர்கள் குறித்து புதிய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் அரசியல் கைதிகள் விடுதலை ஐ.நா அறிக்கையை வெளியிடுதல், சர்வதேச விசாரணை ஆகியவற்றை வலியுறுத்தி யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்று பேரணியாக ஆஸ்பத்திரி வீதி, காங்கேசன்துறை வீதியால் உலகத் தமிழாராட்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவுச் சதுக்கத்தையடைந்தது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி யினால் கடத்தப்பட்டவர்கள் எங்கே என கோசங்களை எழுப்பி தமது உணர்வுகளை வெளிப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.
மேலும் இராணுவத்தினரால் கடத்தப்பட்டவர்கள் எங்கே,சரணடைந்து காணாமல் போனவர்கள் எங்கே, காயத்துடன் இராணுவத்திடம் கையளித்தவர்கள் எங்கே, ரி.ஐ.டி கூட்டிச் சென்ற எமது பிள்ளைகள் எங்கே போன்ற கோசங்களை எழுப்பி மக்கள் ஆர்ப்பரித்தனர்.