புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2015

மகிந்த, வீரவன்ஸ மற்றும் கம்மன்பில ஆகியோருக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது: சுதந்திரக் கட்சி


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில கூட்டணிக் கட்சிகள் எப்படியான முயற்சிகளில் ஈடுபட்டாலும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள சிரேஷ்ட தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை கடுமையாக எதிர்க்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக அந்த கட்சியின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட எந்த வகையிலும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
பிரதமர் வேட்பாளரை அறிவிக்காது தேர்தலில் போட்டியிடவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எண்ணியுள்ளது.
விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில போன்ற கடும் ராஜபக்ச ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதையும் அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்த நிலைமையில், வீரவன்ஸ மற்றும் கம்மன்பில போன்றவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது சந்தேகத்திற்குரியது எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டால், கிடைக்கக் கூடிய வாக்குகளும் கிடைக்காமல் போகலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கணித்துள்ளனர்.
விமல் வீரவன்ஸ மற்றும் அபிவிருத்தித்திட்டங்கள் ஊடாக செல்வந்தர்களான பிரதேச அரசியல்வாதிகளுக்கே மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் தேவை இருப்பதாகவும் அந்த முயற்சிகளை தோற்கடித்து புதிய தலைவர்களின் தலைமையில் போட்டியிட வேண்டும் என்பதே சிரேஷ்ட தலைவர்களின் நிலைப்பாடாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ad

ad