புதிய தலைமுறை,புதுயுகம் நிறுவனர் திரு.சத்தியநாராயணன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்
வணக்கம்,
எனது பெயர் அறிவுமணி(எ)சூர்யா (Emp. ID :C0421). நான் ஆகஸ்ட் 2012முதல், கடந்த இரண்டரை வருடங்களாக Video Editor ஆக New Generation Media Corporation Pvt Ltd ல் பணிபுரிந்து வருகிறேன். தற்போது தொலைக்காட்சி நிறுவனங்களில் Video Editor ஆக பெண்களை பணியில் அமர்த்துவது அரிது. தங்களது நிறுவனத்தில் பெண்களுக்கு உரிய மதிப்பளிக்கும் விதத்தில் எங்களை பணியமர்த்தி உள்ளீர்கள். இங்கு Video Editor ஆக பணியிலிருப்பவர்களில் இருவர் மட்டுமே பெண்கள். அதில் நானும் ஒருவர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்திருந்தேன்.
நான் இதுவரை வீடு தாண்டி வருவாயா, ரிஷிமூலம், குருசிஷ்யன் மற்றும் சாமானியருடன் ஒருநாள், ஆயுதம் செய்வோம் போன்ற நிகழ்ச்சிகளை Edit செய்துள்ளேன். புதிய தலைமுறை, புதுயுகம் பணியாளர்களில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்களில் நானும் ஒருவர். இருப்பினும் எனது வேலையில், நான் Edit செய்த நிகழ்ச்சிகளின் தரத்தில் நான் எந்த குறையும் வைத்ததில்லை. நான் சாமானியருடன் ஒருநாள் நிகழ்ச்சியை Edit செய்துகொண்டிருந்த சமயம், ஆயுதம் செய்வோம் நிகழ்ச்சியை புதிய வடிவில் மாற்றியபோது அப்போதைய எடிட்டரின் பணி திருப்தியளிக்காததால், நான் அந்நிகழ்ச்சியை எடிட் செய்ய வேண்டும் என்றும் அன்றைய புதிய தலைமுறையின் நிகழ்ச்சிப்பிரிவு தலைமை அதிகாரி அவர்களே Post Production Supervisorம் கேட்டு என்னை ஆயுதம் செய்வோம் நிகழ்ச்சிக்கு மாற்றினார் என்பதே எனது திறமைக்குச் சான்று.
இந்நிலையில் கடந்த 19.10.2014 அன்று HR அவர்கள், ஆட்குறைப்பு செய்வதாகவும் அதனால் என்னை resign செய்யச் சொல்லியும், என்னிடம் resignation letter கேட்டுள்ளார். 15 எடிட்டர்களிடம் இதேபோல் resign செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு நிறுவனம் ஆட்குறைப்பு செய்வதெனில் பணிமூப்பு(seniority) அடிப்படையில் இறுதியாக பணியில் சேர்ந்தவர்களையே முதலில் குறைக்கவேண்டும். அல்லது பணியாளரின் பணியில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி, அவர்களிடம் உரிய விளக்கம் கேட்க வேண்டும் என்ற சட்ட விதிமுறைகளுக்கு மாறாக எங்களை resign செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.
எனவே நாங்கள் அனைவரும் சேர்ந்து எங்களது supervisor இடம் இதுபற்றி முறையிட்டோம். அவர் நான் தான் உங்களது supervisor என்றும், எனக்கு கீழ்தான் நீங்கள் இருக்கிறீர்கள் என்றும், எனக்கு இதுவரை தெரியாது மேலும், நிறுவனம் உங்களை வெளியேறச் சொன்னால் resign செய்து விட்டு வெளியேறுங்கள், வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள் என்று பொறுப்பற்ற முறையில் பதில் கூறினார்.
இருப்பினும், நாங்கள் அனைவரும் சேர்ந்து பேசியதன் விளைவாகவும் யாரும் resign செய்ய மறுத்ததனாலும் எங்களில் சிலரை வேலைக்கு எடுத்துக்கொண்டார்கள். மீதமுள்ள எங்களுக்கு பணியும் வழங்கப்படவில்லை, எங்களது சம்பளத்தையும் நிறுத்திவைத்துள்ளார்கள். அதே நேரத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து hrஇடம் கேட்டதற்கு திரும்ப பணியில் அமர்த்தியவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அவர்களை திரும்ப அழைத்தது ஒரு தற்காலிகத்தீர்வே என்றும் அவர்களை என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியும், உங்களுக்கு ஏற்கனவே சொன்னது போல் resign செய்துவிடுங்கள், resign செய்தால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எங்களது நிலை குறித்து நிறுவனத்தின் மற்ற உயர் அதிகாரிகளுக்கும், தங்களுக்கும் mail அனுப்பியும் இதுவரை எந்த பதிலுமில்லை. சந்திக்கவும் முடியவில்லை.
இந்நிலையில் வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவருக்கு மன உளைச்சலினால் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, bypass surgeryக்காக காத்திருக்கிறார். அவருக்கு மருத்துவ உதவிகளைசெய்யக் கோரியும் இதுவரை பதிலில்லை. மேலும் மற்றொரு பெண் Editorஐ, resign செய்யச் சொல்லும்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவருக்கு மன உளைச்சலினால் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, bypass surgeryக்காக காத்திருக்கிறார். அவருக்கு மருத்துவ உதவிகளைசெய்யக் கோரியும் இதுவரை பதிலில்லை. மேலும் மற்றொரு பெண் Editorஐ, resign செய்யச் சொல்லும்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
NOKIA, TCS நிறுவனங்களின் தவறுகளை செய்திகளாக்கும் புதிய தலைமுறை தனது நிறுவன ஊழியர்களிடம் சட்டத்திற்குப் புறம்பாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது.
அலுவலகத்திற்குள் சீட்டுக்கம்பெனி வைத்து நடத்துபவருக்கும், வருகைப்பதிவுக்கான IN&OUT மட்டும் வைத்து விட்டு தங்களது சொந்த வேலையைப் பார்க்கச் சென்று விடுபவர்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கும் BUDJETல் கையாடல் செய்பவர்களுக்கும், பெண்களிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொள்வோருக்கும் அதிக சம்பளமும், ஊதிய உயர்வும் வழங்கப்படுகிறது. ஆனால் குறைந்த சம்பளத்திலும் நியாமாக உழைக்கும் எங்களது வயிற்றில் அடிக்கப்படுகிறது.
செய்தித்தாள் செய்திகளில் வரிகளுக்கிடையேயான அர்த்தங்களை ஆராயும், அலசும் புதிய தலைமுறை, தனது ஊழியர்களின் உழைப்பையும், திறனையும் ஆராயாமல் எங்களை வெளியேற்றியது ஏன்?
நீங்கள் (நிறுவனர் திரு.சத்தியநாராயணன்) புதியதலைமுறையின் ஆண்டு விழா ஒன்றில் பேசும் பொழுது, தமிழ்நாட்டின் பிரச்சனைக்குரல்கள் டெல்லிக்கு எட்டவில்லை, அதனால் டெல்லியில் செய்திச்சேனல் துவங்க ஆவல் கொண்டிருப்பதாக சொன்னது மகிழ்ச்சியளித்தது. ஆனால் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வேதனைக்குரலுக்கு செவிசாய்க்காதது வேதனையளிக்கிறது.
மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு உரிய மருத்துவ செலவுகளை அளித்து அவரையும், தற்போது குழந்தையை பெற்றிருக்கும் பெண்ணையும், திரும்ப வேலையில் அமர்த்துமாறும், பாதிக்கப்பட்ட மற்ற ஊழியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட சம்பளத்தை தருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
அறிவுமணி(எ)சூர்யா
(Emp. ID :C0421)
அறிவுமணி(எ)சூர்யா
(Emp. ID :C0421)