யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் உள்ளிட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பிலான தகவல்களை மறைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதிரனலாகே விமலசேன மற்றும் அல்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ராஜகருணா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகவல்களை மறைத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று குறித்த இருவரையும் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சில காலங்களுக்கு முன்னர் பிரபல வர்த்தகர் ஒருவரின் படுகொலை தொடர்பிலான தகவல்களை இந்த அதிகாரிகள் இருவரும் மறைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பியகம விலேஜ் ஹோட்டல் உரிமையாளர் பேர்னாட் ஜயரட்ன வெட்டிக்கொலை செ;யயப்பட்டிருந்தார்.