மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
பிரசாந்த ஜயக்கொடி இன்று (26) நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தனக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலை அடுத்து பிரசாந்த ஜயக்கொடி, அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச் சென்று சிட்னி நகரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று நாடு திரும்பும் பிரசாந்த ஜயக்கொடி விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி தனக்கு கடந்த கால சம்பவங்களை அம்பலப்படுத்துவார் என எதெரிவிக்கப்படுகிறது.