புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2015

கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்புக்கு இரு அமைச்சுக்கள்


கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இரு அமைச்சுப் பதவிகள்
 வழங்கப்பட்டுள்ளன.
 
இதற்கமைய கிழக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான சி.தண்டாயுதபாணி கே.துரைராஜசிங்கம் ஆகியோர் மாகாண அமைச்சுப் பதவிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
 
கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் மேற்படி அமைச்சுப் பதவிகளுக்கான பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன.
 
கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சராக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணியும், விவசாய, கால்நடை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சராக கே.துரைராஜசிங்கமும் பிரதித் தவிசாளராக பிரசன்ன இந்திரகுமாரும் நியமிக்கப்படவுள்ளனர்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடன் முதலமைச்சர் பதவியைப் பெற்றிருந்தது.
 
மாகாண ஆட்சியில் அனைத்துக் கட்சிகளையும் பங்கேற்குமாறு பகிரங்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்களுக்கும்  முஸ்லிம் காங்கிரசுக்குமிடையிலான பேச்சுகள் இடம்பெற்றிருந்தன.
 
இதன்போது இரண்டு அமைச்சுக்களையும், பிரதி தவிசாளர் ஆகிய பதவிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.
 
எனினும் ஜனாதிபதியுடனான பேச்சின் பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று  இரா.சம்பந்தனுக்கும்  கிழக்கு மாகாணத்தின்  கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
 
கட்சியின் இறுதித் தீர்மானத்துக்கு அமைய தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ மற்றும் கிழக்கின் முதல்வர் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன

ad

ad