முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலை நடாத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.
குறித்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் நாளை நடைபெறவிருந்த நிலையில் வேட்பாளர்கள் இருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தமையினையடுத்து தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் மார்ச் 27ஆம் திகதி வரை தேர்தலை நடாத் முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் முல்லை .மாவட்ட அரச அதிபரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
நாளைய தினம் தேர்தல் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தேர்தல் நாளையதினம் நடாத்தப்படாது என்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்