26 ஏப்., 2019

திருகோணமலையில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 14 சந்தேக நபர்கள் கைது

திருகோணமலையில் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒரு இந்தியரும், ஒரு பாகிஸ்தானியரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.