புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2019

தயாநிதி அழகிரியின் 40 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது அமுலாக்கத்துறை

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் மகன் தயாநிதியின் 40 கோடி
ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமுலாக்கத்துறை முடக்கியது.
இந்த சொத்து முடக்கம் குறித்து அமுலாக்கத்துறை இன்று (புதன்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பணமோசடி தடுப்பு சட்டம், 2002இன் கீழ் ஒலிம்பஸ் கிரனைட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு உரிய மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலம், கட்டடங்கள் மற்றும் வைப்பு தொகைகள் என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான தயாநிதி அழகிரியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் 25 அசையும் மற்றும் அசையா சொத்துகள் அடங்கும். சட்டவிரோத முறையில் இந்த சொத்துகள் ஈட்டப்பட்டுள்ளன.
இந்த தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் தயாநிதி அழகிரி உள்ளிட்ட பிற குற்றவாளிகள், சட்டவிரோத முறையில் குத்தகை நிலத்தில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு பலன்பெற்று, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நடந்த விசாரணையில், இவர்கள் இலாப நோக்குடன் தொடர்ச்சியாக குற்றத்தில் ஈடுபட்டது, சட்டவிரோத முறையில் குவாரி நிறுவனம் நடத்தி, அதன்வழியே வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது

ad

ad