26 ஏப்., 2019

நோர்வே காட்டுத்தீ: நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

நோர்வேயின் தெற்கு பகுதியில் பர
விவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காட்டுத்தீ பரவி வருகின்ற நிலையில், 148 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கடும் காற்று வீசி வருவதால் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு இடையூறாக விளங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக மேலும் பல பகுதிகளில் காட்டுத்தீ பரவும் அபாயம் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.