புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஏப்., 2019

யாழ் மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

யாழ்ப்பணத்தில் சந்தேகத்துக்கிடமானவர்களையோ அல்லது மர்ம பொதிகளை கண்டாலோ அருகில் உள்ள பாதுகாப்பு
தரப்பினருக்கு அறிவிக்குமாறு யாழ்ப்பான மாவட்ட செயலர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து யாழ்ப்பான மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் பாதுக்கப்பு தரப்பினருடன் இன்று அவசர கலந்துரையாடல் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது...
இலங்கையின் பல பாகங்களிலும் கடந்த 21 ஆம் திகதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. அந்த சம்பவத்தினால் பலர் உயிரிழந்ததுடன் ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. குறித்த வெடிப்பு சம்பவவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் நாம் மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர், பொலிசார், பிரதேச செயலர்கள் போன்றவர்களை அழைத்து பேசினோம். குறிப்பாக எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. எனவே பாடசாலைகளின் பாதுகாப்புகள் தொடர்பாக ஆராயபட்டு வருகின்றன. அத்துடன் யாழ் நகரில் இயங்கும் பிரபல தனியார் கல்வி நிறுவனங்களும் பாடசாலைகள் இயங்கும் வரை வகுப்புக்களை நிறுத்தி எமக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் உங்கள் பகுதிகளில் சந்தேகத்திடத்துக்கமான நபர்கள் வந்தாலோ மர்ம பொருட்களை கண்டாலோ உடனடியாக அருகில் பாதுக்கப்பு தரப்பினருக்கோ அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.