புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2019

கனடா சட்டத்தில் மாற்றம்: அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி

தனியார் நிதி உதவியுடன் அகதிகளுக்கு உதவும் திட்டத்தின் 40ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படும் அதே நேரத்தில், அகதிகளுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றை கனடா விடுத்துள்ளது.

முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் கூட ஆயிரக்கணக்கான சிரிய அகதிகளை கனடா ஏற்றுக் கொண்டது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தானே நேரடியாக விமான நிலையம் சென்று அகதிகளை வரவேற்ற சம்பவமும் நடந்தேறியது.

ஆனால் அதற்கு நேர் மாறாக, வெளியிடப்பட்டுள்ள அரசின் பட்ஜெட்டில், அகதிகள் தீர்மானிப்பு அமைப்பில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது இன்னொரு நாட்டில் அகதி கோரிக்கை வைத்தவர்கள் இனி கனடாவில் அகதி கோரிக்கை வைக்க முடியாது என்னும் அதிர்ச்சிக்குரிய மாற்றம்தான் அது.

இந்த மாற்றம் சமூக ஆர்வலர்கள் மற்றும் அகதிகள் நலனுக்காக குரல் கொடுப்போருக்கு கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. கனடா அரசு புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் இந்த சட்ட திருத்தத்தைச் சேர்த்துள்ளது.

இதனால் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஏற்கனவே அகதி கோரிக்கை வைத்தவர்கள், கனடாவில் அகதி அந்தஸ்து தீர்மானிப்பதற்கான விசாரணக்குட்படுத்தப்படமாட்டார்கள்.

இந்த மாற்றம் அகதிகள் உரிமைகளை பாதிக்கும் என்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மொன்றியல், கனடா அகதிகளுக்கான குரல் கொடுப்போர் மற்றும் சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்

ad

ad