
ரஷ்யாவின் எரிவாயு விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதை எதிர்கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், வரவிருக்கும் குளிர்காலத்தை கடக்க ஒன்றையொன்று நம்பியுள்ளன. பிரான்சைப் பொறுத்தவரை,
![]() சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்கு வந்த 183 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய கடல் எல்லைப் பாதுகாப்பின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். |
![]() பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், அவர்கள் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று விடுதலை செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபோதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்தார்.
![]() மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி மன்றில் ஆஜராவதற்காக மீண்டும் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றம், கட்டளையிட்டது |
![]() இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர், நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளனர் |
![]() பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் , பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது தெரிவித்தார். |
ஈராணிய தயாரிப்பான தற்கொலை குண்டு விமானங்களை ரஷ்யா பயன்படுத்தி உக்கிரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறித்த ஆளில்லா விமானம் சுமார் 12 அடி நீளமானவை. அவை 50KG வெடி குண்டை தாங்கிச்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி, படு ஜாலியாக தமக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக ரிவீட்டர் பக்கத்தில் பதிவைப் போட்டார்கள். ஆனால் அங்கே தான் பெரும் சர்சை வெடித்தது. இதனை இவர்கள் சற்றும் எதிர்பார்கவில்லை. காரணம் என்ன
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
![]() வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது |
![]() அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) உறுப்பினர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் விலகியுள்ளதாக் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று சபைக்கு அறிவித்தார் |
![]() ஜேர்மன்-போலந்து எல்லையில் ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை கண்டுபிடித்தனர். ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களைக் கண்டுபிடித்தனர். ஜேர்மன்-போலந்து எல்லைக்கு அருகில், கிழக்கு மாநிலமான Brandenburg-ல் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். |
![]() எதிர்வரும் வருடம் மார்ச் 20ஆம் திகதிக்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது |
![]() இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் |
![]() அரசியலமைப்பின் எதிர்வரும் 21 ஆம் திகதி 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன |
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் நேற்று சந்தித்து உரையாடினார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது |
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று திடீர் சந்திப்பு இடம்பெற்றது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கலந்துரையாடல் மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது |
![]() வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐ.நா அலுவலகத்தின் முன்பு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச விசாரணையை கோரி இன்று காலை முதல் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர் |
![]() எல்லைகளை பாதுகாப்பதற்காக கிட்டத்தட்ட 9000 ரஷ்ய ராணுவ துருப்புகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளிடம் இருந்து எல்லைகளை பாதுகாப்பதற்காக பிராந்தியக் குழுவின் ஒற்றை பகுதியாக 9000 ரஷ்ய வீரர்களுக்கு சற்று குறைவான துருப்புகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக சனிக்கிழமை மின்ஸ்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது |
![]() விஜய் டிவியில் ஒலிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் மக்களுக்கு தெரிந்த பல முகங்கள் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளனர். மேலும் பிக் பாஸ் தொடங்கி கிட்டதட்ட ஒரு வாரம் ஆன நிலையில் மக்களை அதிகம் கவர்ந்த 5 போட்டியாளர்களை பார்க்கலாம் |
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவிக்கு நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். |
![]() சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் 10 ஆம் திகதி நடந்த கலந்துரையாடலில் தமிழ் மக்களின் சுயநிர்ணயம், சர்வதேச நீதி விசாரணை என்பனவற்றை வலியுறுத்தி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள் நிகழ்த்திய உரை |
![]() ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். |
![]() ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருவதால், 14 நாடுகளின் விமானப் படையை உள்ளடக்கிய நேட்டோவின் அணு ஆயுத பயிற்சி இந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. போர் நடவடிக்கையின் உச்சகட்டமாக கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நான்கு முக்கிய நகரங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் |
![]() பளை - முகமாலை பகுதியில் இன்று காலை பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர் |
![]() துருக்கியின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு துருக்கியின் பார்டின் (Bartin) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு விபத்தில் டஜன் கணக்கானோர் சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
![]() முழு பிரித்தானியாவையே கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புடின் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. உலகிலேயே பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் அந்த நீர்மூழ்கிக் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது. |
![]() ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார். ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்துகிறார் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். |
![]() விடுதலைப்புலிகளை நான் அழித்ததாக தெரிவிக்கப்படுவது சரியானதில்லை என தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் காணாமல்போனவர்கள் குறித்த பதில்களை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும் வடக்கிற்கு அதிகார பகிர்வு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார் |
![]() யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறி படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. |
![]() முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் இடம்பெறவுள்ளது. |
![]() வரக்காபொல - தும்பிலியத்த பகுதியில் நேற்று மண் மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் புதையுண்டனர். அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு இருந்தார். காணாமல் போன மூவரை தேடும் பணிகள தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இன்று முற்பகல் 10.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
![]() பிரான்ஸில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதை அடுத்து, (Seine-Saint-Denis) மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடு ஒன்று அமுலுக்கு வந்துள்ளது. அதற்கமைய, இம்மாவட்டத்தில் உள்ள நிரப்பு நிலையங்களில் கொள்கலன்களில் (jerry cans) எரிபொருட்களை விற்பனை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது |
![]() ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது |
![]() பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ஸ்ரீலணி பெரேரா, இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார் |
![]() யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம் என்பன மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 35 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் |
கடன் மறுசீரமைப்பு - இந்தியா, சீனா மௌனம்! [Friday 2022-10-14 18:00] |
![]() இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து துரிதமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பரிஸ் கிளப் தெரிவித்துள்ளது |
![]() திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தலை இலக்காகக் கொண்டு இவ்வாறான தீர்மானம் எடுக்கப்படாமல் எதிர்கால சந்ததியினரை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் |
![]() கனடாவின் ரொறன்ரோ மார்க்கம் நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட இளையோர் இருவர் உயிரிழந்துள்ளனர் |