புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014


ஆசிய கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம் முதல் போட்டியில் இலங்கை -பாகிஸ்தான்


ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதே'pல் இன்று ஆரம்பமாவுள்ளது. ஐந்து நாடுகள் மோதும் தொடரின் முதல் பேட்டியில் இன்று பதுல்லாஹ்வில் இலங்கை பாகிஸ்தான் அணியுடன்
மோதவுள்ளது. இலங்கை, பாகிஸ்தான் அணிகள் அண்மை யில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. அதில் பாகிஸ்தான் அணி தொடரை வென்றது. ஆனால் இலங்கை கடைசியாக பங்களாதேஷ் மண்ணில் பங்களாதே'{க்கு எதிரான ஒருநாள் தொடரில் வெற்றியீட்டிய உட்சாகத்துடன் இன்று களமிறங்குகிறது.
இதில் இரு அணிகளிலும் உள்ள இளம் வீரர்கள் அண்மைக் காலத்தில் சோபித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணியில் ஸ்திரமான ஆரம்ப ஜோடியாக 'hர்ஜpல் கான் மற்றும் அஹ்மட் 'ஹ்ஸாத் உருவெடுத்துள்ளனர். ஜ{னைட் கான் தனது வேகப்பந்து வீச்சில் தனி இடம் பிடித்திருக்கிறார். கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறிய மொஹமட் ஹபீஸ் ஒருநாள் போட்டிகளில் வித்தியாசமான வீரராக சோபிக்கிறார். எனவே பாக். அணி வலுவான நிலையிலேயே ஆசிய கிண்ணத்தை முகம்கொடுக்கவுள்ளது.
மறுபுறத்தில் ஆசிய கிண்ணம் நடக்கும் பங்களாதேஷ் மண்ணில் விளையாடிய அனுபவத்துடன் இலங்கை களமிறங்குகிறது. இதில் 1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் திலகரத்ன டில்'hன் இன்றி பங்களாதே'{டனான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடி அன்ஜலோ மத்தியு+ஸ் தலைமையிலான இலங்கை அணி வெற்றியிட்டியது குறிப்பிடத்தக்கது.
விரல் காயம் காரணமாக டில்'hன் ஆசிய கிண்ண தொடரில் பங்கேற்காதபோதும் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இடம்பிடித்திருப்பது அணிக்கு பலம் சேர்க்கிறது. மத்தியு+ஸ{ம் தனது தலைமை பதவியில் ஸ்திரம் கண்டுள்ளார் என்று எதிபார்க்கலாம். குறிப்பாக ஜயசூரிய பாணியில் ஆரம்ப வீரராக ஆடிவரும் குசல் பெரேரா பங்களாதே'{டனான கடைசி ஒருநாள் போட்டியில் கன்னிச் சதத்தைப் பெற்று நம்பிக்கை அளிக்கிறார்.
சுரங்க லக்மால், லசித் மாலிங்க மற்றும் தம்மிக்க பிரசாத் (காயத்திற்கு உள்ளான நுவன் குலசேகரவுக்கு பதில் அழைக்கப்பட்டார்) அகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். தவிர ரங்கன ஹேரத்தின் இடைவெளியை சுழற்பந்து வீச்சில் அஜந்த மெண்டிஸ் நிரப்புவார் என எதிர்பார்க்கலாம்.
எனினும் அதிக இளம் வீரர்களைக் கொண்ட இரு அணிகளினதும் ஆட்ட திறன்பற்றி எதிர்வு கூறுவது கடினமாக உள்ளது. மறுபுறத்தில் மற்றோரு வலுவான அணியாக இந்தியா தனது அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி இன்றியே ஆசிய கிண்ணத்தில் களமிறங்குகிறது. காயத்திற்கு உள்ளாகியிருக்கும் தோனிக்கு பதில் விராட் கொஹ்லியே அணியை வழி நடத்துகிறார். அண்மைக்காலத்தில் வெளிநாட்டு மண்ணில் மோசமான தோல்விகளை சந்தித்துவரும் சூழலில் ஆசிய கிண்ணம் இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும். இந்தியா தனது முதல் போட்டியில் நாளை போட்டியை நடத்தும் பங்களாதேi' எதிர்கொள்கிறது.
இதில் ஐந்தாவது அணியாக ஆப்கானிஸ்தான் ஆசியா கிண்ண தொடரில் பங்கேற்றுள்ளது.

ad

ad