புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014


காங்கிரஸ், பாஜக கொடிகளை எரித்த 7 தமிழர்கள் விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பினர்
7 தமிழர்கள் விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர்கள், 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை இரத்து செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர்களையும் மனிதாபிமானத்தோடு உடனடியாக விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
பெருந்துன்பங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பிற்குப் பின்னர் பெறப்பட்ட நீதியை தடுக்கும் வகையில் காங்கிரசார் செயல்படுகின்றனர். பொய் உணர்ச்சி கொண்டு மனிதப்பண்பின்றி தேசிய கட்சிகள் காங்கிரசும், பாஜகவும் செயல்பட்டு மக்களைக் குழப்பி வருகின்றனர். இச்செயலை கடுமையாகக் கண்டிக்கிறோம்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்த-ல் தமிழக மாணவர்கள் அனைத்து மாணவர் அமைப்பையும் ஒருங்கிணைத்து பிற தமிழ் உணர்வாளர்களுடன் இணைந்து 7 தமிழர்கள் விடுதலையை எதிர்ப்பதவர்களை எதிர்த்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்வோம் என்றனர்.
பின்னர் அவர்கள் அனைவரும், காங்கிரஸ் மற்றும் பாஜக கொடிகளை உருவபொம்மை ஒன்றில் கட்டி சென்னை பாரிமுனையில் உள்ள குறளகம் அருகே எரித்தனர். அதனை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். போலீசாரின் செயல்களை கண்டித்தும், 7 பேரின் விடுதலைக்கு ஆதரவாகவும் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

ad

ad