புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014


வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி.உயிருக்கு போராடும் யானையால் கோவையில் பரபரப்பு
கோவை அருகே  இன்று காலை 6 மணிக்கு பூண்டி வனச்சரகத்துக்குட்பட்ட முட்டத்து வயல் என்ற ஊருக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு உள்ள தோட்டத்தில் வீடு அமைத்து விவசாயி ஓருவர் குடியிருந்து வருகிறார். அந்த யானை விவசாயின் தோட்டத்திற்குள் நுழைந்தது.


அதிகாலை நேரம் என்பதால் விவசாயி குடும்பத்தினருடன் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்தார். அங்கு பயிரிட்டிருந்த விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தியது. பின்னர் விவசாயின் வீட்டு ஓட்டை ஒவ்வொன் றாக பிரித்து எரிந்தது.
வீட்டின் ஓடு முழுவதையும் பிரித்த பின்னர் யானை தனது தும்பிக்கையை வீட்டுக்குள் நுழைத்து அங்கிருந்த பொருட்களை வீட்டுக்கு வெளியே இருந்தபடி சூறையாடியது. பொருட்கள் உருண்டு கவிழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த விவசாயி தனக்கு அருகில் யானையின் தும்பிக்கை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே குடும்பத்தினரை எழுப்பி வீட்டுக்குள் பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக் கொள்ள செய்தார்.
யானையை விரட்ட பாத்திரங்களை தூக்கி கீழே வீசி சத்தம் போட்டார். ஆனால் அதற்கு அந்த யானை மசியவில்லை. தொடர்ந்து வீட்டுக்குள் இருந்த பொருட்களை எடுத்து சூறையாடின. இதனால் ஆத்திர மடைந்த விவசாயி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து யானையின் தும்பிக்கையை ஒரே வீச்சில் வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் யானை வீட்டின் மீது சரிந்தது. பின்னர் தும்பிக்கையில் ரத்தம் சிந்த சிந்த விவசாயின் வீட்டின் முன்பு படுத்து உருண்டு கொண்டு பயங்கரமாக பிளிறியது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஒடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் யானை உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது.
அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக விவசாயின் வீட்டிற்கு முன்பு ஒற்றை காட்டு யானை பிளிறிய படி நிலத்தில் உருண்டு கொண்டிருந்தது.
பொதுமக்கள் அங்கு திரள்வதை கண்ட காட்டு யானை எழுந்து பூண்டி வனச்சரக பகுதியில் உள்ள பள்ளத்திற்குள் சென்று படுத்துக்கொண்டு வலியில் பிளிறிக்கொண்டு இருந்தது. இதற்கிடையே யானையை அரிவாளால் வெட்டிய விவசாயி குடும்பத்தினருடன் தலைமறைவானார்.
யானை வெட்டப்பட்ட இடத்திற்கு தகவலறிந்து கோவை மாவட்ட வனச்சரக அலுவலர் செந்தில் குமார் தலைமையிலான மாவட்ட வன அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பின்னர் யானை படுத்துக்கொண்டு இருக்கும் பள்ளத்திற்கு வந்து தூரத்தில் இருந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
தலைமறைவான விவசாயியை கைது செய்ய வனத்துறையினரும், போலீசாரும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். அதே சமயம் வெட்டப்பட்ட காட்டு யானை ஆத்திரத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க பொதுமக்களை யானையின் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ad

ad