புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014



இந்திய அரசியலில் மற்றுமோர் திருப்பம் .11 கட்சிகள் இணைந்து உருவான மூன்றாவது அணி
 


மக்களவைத் தேர்தலையொட்டி இடதுசாரிகள், சமாஜ்வாதி, அதிமுக உள்ளிட்ட 11 கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை முறைப்படி அறிவித்தன.



டெல்லியில் இன்று ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள், சமாஜ்வாதி, அதிமுக உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


 ஏ.பி.பரதன் (இந்திய கம்யூ.) நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்), தேவகெளடா (மதசார்பற்ற ஜனதா தளம்), பிரகாஷ் காரத் (மார்க்சிஸ்ட்), சரத் யாதவ் (ஐக்கிய தனதா தளம்), முலாயம் சிங் (சமாஜ்வாதி, தம்பிதுரை (அதிமுக) மற்றும் தேவப்பிரத பிஸ்வாஸ் (ஃபார்வர்டு ப்ளாக்) ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேசிய மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், மாபெரும் ஊழல்களுக்கும், கடுமையான விலைவாசி அதிகரிப்புக்கும் காரணமான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வீழ்த்துவதற்காக 11 கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படும் என்று தெரிவித்தார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் பாஜகவுக்கு மாற்றாகவே 11 கட்சிகள் கொண்ட இக்கூட்டணி அமையும் என்றும் காரத் குறிப்பிட்டார். மேலும், தங்களுடன் மதசார்பற்றக் கட்சிகள் இணையலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
அதேவேளையில், தங்களது பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து தேர்தலுக்குப் பின்னரே பேசுவது என மூன்றாவது அணி முடிவு செய்துள்ளது.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் இது குறித்து,   ’’இந்த மூன்றாவது மாற்று அணி மேலும் விரிவடையலாம். இன்று 11 கட்சிகள் உள்ள இந்த அணியில், பின்னாளில் 15 கட்சிகள் இடம்பெறக் கூடும்’’ என்றார்.


ad

ad