புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014

ஐ.நா மனித உரிமைச்சபையில் தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணை கோரும் பொறிமுறையினை நோக்கி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயல்முனைப்பினை தீவீரப்படுத்தியுள்ளது.
இராஜதந்திரத்தளம், மனித உரிமைத்தளம், அரசியற்தளம், மக்கள்தளம், பரப்புரைத்தளம், ஊடகத்தளம் என பன்முகத்தளத்தில் அனைத்துலக விசாரணையினை நோக்கிய செயல்முனைப்பினை மேற்கொண்டுள்ளது.

இராஜதந்திரத்தளம்:
ஐ.நா மனித உரிமைச்சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளை நோக்கி நேரடியாகவும், நாடுவாரியாக உள்ள தூதரங்கள் ஊடாகவும் தொடர்சியான சந்திப்புக்கள்.
மனித உரிமைத்தளம்:
அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கைக்கு, புலம்பெயர் தேசங்களில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள், சமூக> அரசியற் பிரதிநிதிகளின் தோழமையினைத் திரட்டல்.
அரசியற்தளம்:
பன்னாட்டு விசாரணக்கும், பொதுசன வாக்கெடுப்புக்கும் இந்திய மற்றும் தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஊடான இந்திய அரசினை நோக்கிய செயற்பாடு.
மக்கள்தளம்:
அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைச்சபை அங்கத்துவ நாடுகளை நோக்கி பொதுமக்கள் ஒப்பமிட்டு அனுப்பும் தபால் அட்டை மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்கள்.
பரப்புரைத்தளம்:
வேற்றின மக்களிடத்தில், சிங்களத்தின் தமிழின அழிப்பின் கோர முகத்தினை அம்பலப்படுத்தியும், ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வெளிப்படுத்தியும், லண்டனில் இருந்து பிரான்ஸ் ஊடான ஜெனீவா நோக்கிய நடைப்பயணம்.
ஊடகத்தளம்:
அனைத்துலக விசாரணைக்கான பொறிமுiயினை உருவாக்குவதற்கான வலுவானதொரு கருத்துருவாக்கத்தினை அனைத்துலக ஊடகத்தளத்தில் ஏற்படுத்தும் செயற்பாடுகளோடு, (Facebook , Twitter) சமூக வலைத்தளங்கள் ஊடான பரப்புரை.
இவ்வாறு பன்முகத்தளங்களில் தனது செயற்பாட்டினை தீவிரப்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஐ.நா மனித உரிமைச்சபையினை மையப்படுத்திய தனது மூன்றாவது ஆவணக் கையேட்டினையும் வெளியிடுகின்றது.
இதேவேளை ஐ.நா மனித உரிமைச்சபையிலும் கூட்டத் தொடர் நாட்களில் தனியாகவும் கூட்டாகவும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.

ad

ad