புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014


தேனாம்பேட்டை அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை:எழும்பூர் நீதிமன்றத்தில் 7 பேர்  சரண்
சென்னை தேனாம்பேட்டை பர்வாநகரைச் சேர்ந்தவர் ஐ.எஸ்.ஆறுமுகம் (30). இவர் 115வது வட்ட அதிமுக துணைச் செயலராக இருந்தார். ஆறுமுகம், கந்து வட்டித் தொழிலும் செய்து வந்தார்.



இந்நிலையில் ஆறுமுகம், தனது வீட்டின் அருகே உள்ள டீக்கடைக்கு இன்று காலை சென்றார். அந்த டீக் கடையின் அருகே ஆறுமுகம் சென்றுக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த 4 பேர் ஆறுமுகத்திடம் தகராறு செய்தனராம். தகராறு முற்றவே 4 பேரும் ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த தேனாம்பேட்டை போலீஸார் ஆறுமுகம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து தேனாம்பேட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் (28), கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தங்கத்துரை (32), வெங்கடேசன் (28), சுந்தர் (26), முத்துக்குமார் (25), பாலா (32), ராமலிங்கம் (30) ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, தேடினர்.
இந்நிலையில் தேடப்பட்ட 7 பேரும் எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர குற்றவியல் 2வது நடுவர் மன்றத்தில் மாலையில் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்றம் 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து 7 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ad

ad