புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 259 தொகுதிகள் வரை கைப்பற்றும்: கருத்துக் கணிப்பு. 

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி 259 இடங்கள் வரை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிஎன்என்
-ஐபிஎன் & சிஎஸ்டிஎஸ்: சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி நிறுவனமும், "வளரும் சமுதாய ஆய்வு மையமும்' (சிஎஸ்டிஎஸ்) இணைந்து சமீபத்தில் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
  
2014-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 முதல் 246 வரையிலான இடங்களில் வெற்றி பெறும். 2009 தேர்தலில் 116 இடங்களைப் பெற்ற பாஜக, இந்த முறை 206 முதல் 218 வரையிலான இடங்களைக் கைப்பற்றும் ஆனால் சென்றமுறை 206 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை 94 முதல் 106 இடங்களே கிடைக்கும்.
பிரதமர் பதவி வேட்பாளர்: கருத்துக் கணிப்பில் பங்கேற்ற வாக்காளர்களில் 44 சதவீதத்தினர் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமராவதை 24 சதவீதத்தினர் ஆதரித்துள்ளனர்.
என்டிடிவி: மற்றொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவியின் கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இத்தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 259 தொகுதகளில் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணி 123 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 161 தொகுதிகளிலும் வெற்றியடையும். 2009 மக்களவைத் தேர்தலில் பெற்றதைவிட பாஜக 118 இடங்கள் அதிகமாகவும், காங்கிரஸ் 108 இடங்கள் குறைவாகவும் பெறும்.
தமிழகத்தில் காங்கிரஸிற்க்கு பூஜ்ஜியம்: தமிழகத்தில் பாஜக கூட்டணி மூன்று இடங்களைக் கைப்பற்றும். காங்கிரஸ் கூட்டணிக்கு ஓரிடம் கூட கிடைக்காது. அதிமுக, திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் 36 தொகுதிகளில் வெற்றி பெறும் என என்டிடிவி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ad

ad