புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014


""ஹலோ தலைவரே... … காவிரி பிரச்சினை சம்பந்தமா திருவாரூர் பொதுக்கூட்டத்தில் கலைஞர் விட்ட சவாலுக்கு ஆரணியில் பதில் சவால் விட்டிருக்கிறார் ஜெ. அதுவும் சட்டமன்றத்தில் நேருக்கு நேர் விவாதம் செய்யத் தயார்னு சொல்லியிருக்கிறார்.'' 


""சவாலெல்லாம் பலமா இருந்தாலும், ஜெ.வின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நேரத்தில் இருந்த உற்சாகம், வேகம் இதெல்லாம் குறைகிற மாதிரி தெரியுதே..  பறந்து பறந்து செல்வதால் ஏற்படுற பயணக் களைப்பா?''

""உளவுத்துறை கொடுக்கும் ரிப்போர்ட்தான் ஜெ.வை டென்ஷனாக்குதாம். இப்படிப் பறந்து பறந்து பிரச்சாரம் செய்தும் வெற்றித்தொகுதிகள் நிலவரம் திருப்தி தரலையாம். உளவுத்துறையை சத்தம் போட்ட ஜெ., நால்வர் அணி மந்திரிகளையும் சத்தம் போட்டிருக்காரு. உளவுத்துறைதான் ஒரு தொகுதிக்கு 3 பேரை செலக்ட் செய்து கொடுத்தது. நாங்க கொடுத்த லிஸ்ட்டை ஓரங்கட்டிட்டு அந்த லிஸ்ட்டிலிருந்து தொகுதிக்கு ஒருத்தரை செலக்ட் பண்ணி வேட்பாளரா அறிவிச்சாங்க. நாங்களும் ஓடியாடி வேலை  செய்றோம். பல தொகுதிகளுக்கு வேட்பாளரே சரியில்லை. லிஸ்ட் கொடுத்தது உளவுத்துறை. வாங்கிக்கட்டிக்கிறது நாங்களான்னு நால்வர் அணி புலம்பிக்கிறாங்க.'' 

""உளவுத்துறை சரியா ரிப்போர்ட் தயாரிக்கலையா?''

""அவங்ககிட்டே நால்வர் அணி மந்திரிகளே உங்களை நம்பி ஏமாந்துட்டோம்னு சொல்லியிருக்காங்க. உளவுத் துறையோ, பிரச் சினைக்கு வேட் பாளர் காரணமில்லை. பல ஊர்களிலும் மக்களோட அடிப்படை பிரச்சினை களைத் தீர்க்கலை. அதனால்தான் இந்த நிலைமைன்னு சொல்லியிருக் காங்க. இதையடுத்து, வைட்டமின் தான் கடைசி ஆயுதம்னு முடி வெடுத்து, அதைக் கூடுதலா ஒவ்வொரு தொகுதியிலும் இறக்கியிருக் காங்க. போலீஸ் பாதுகாப்போடு      தான் இதெல்லாம் நடந்துக்கிட்டி ருக்குது.''

""தேர்தல் களத்தில் கொஞ்ச கொஞ்சமா முன்னேற்றம் கண்ட தி.மு.க., ஆளுந்தரப்பின் இந்த வைட்டமின் வியூகத்தை எப்படி எதிர்கொள்ளப்போகுதாம்? முள்ளை முள்ளால் எடுப்பதுபோலவா?''

""பணவசதி படைத்த தி.மு.க வேட்பாளர்களே வெள்ளையப்பனை வெளியே எடுக்க மாட்டேங்கு றாங்கன்னு கட்சிக்காரர்களிடமிருந்து ஏகப்பட்ட புகார்கள். ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட தஞ்சை தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலு, பணம் கொடுத்தெல்லாம் ஓட்டு வாங்க வேணாம். நிர்வாகிகளோட செலவுக்குத்தான் பணம். வாக் காளர்களுக்கு இல்லைன்னு சொல் றாராம். வசதி குறைவா உள்ள வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் பஞ்சப்பாட்டுதான். அ.தி.மு.க தரப்பில் ஓட்டுக்கு நோட்டு தருவதால, அதை எதிர்கொள்ள நாமும் பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிற மாதிரியாவது பணம் தரணும்னு மு.க.ஸ்டாலின்கிட்டே தி.மு.க நிர்வாகிகள் பலரும் சொல்லி யிருக்காங்க.''

""ஸ்டாலின் என்ன சொல்றாராம்?''

""திருமங்கலம் ஃபார்முலான்னு சொல்லப்படுற ஓட்டுக்குப் பணம் கொடுக்கிற அழகிரி ஃபார்முலாவை ஒழிக்கணும்னும், ஓட்டுக்கு கட்சியிலிருந்து பணம் எதுவும் கொடுக்க மாட்டோம்னும் உறுதியா சொல் லிட்டாராம். நிர்வாகிகளும் தொண் டர்களும் தேர்தல் வேலை செய்வதற் காக பணம் தரலாம். ஓட்டுக்கு நோட்டுன்னு கட்சி எதுவும் தராது. வசதியா இருக்கிற வேட் பாளர்கள் தன் கையி லிருந்து செலவு செய்தால் செய்துகொள்ளட்டும்னு சொல்லிட்டாராம்.''

""அழகிரி ஃபார்முலான்னு சொன்னதும் அவரைப் பற்றி ஞாபகம் வருதுப்பா.. ஆதரவாளர்களைக் கூட்டி ஆலோசனை நடத்தியிருக்காரே?''

""ஆமாங்க தலைவரே.. .. 15-ந் தேதி சாயங்காலம் மதுரையில் மாஜி பகுதி செயலாளர்கள் 5 பேர் உள்பட 50 பேரைக் கூட்டிவச்சி ஆலோசனை நடத்தியிருக்காரு. மோடியோட சந்திப்புக்குப்பிறகு ரஜினி தன்கிட்டே பேசியதாகவும், தமிழ்நாட்டுல மோடி அலை இருக்கான்னு கேட்டதாகவும் சொல்லியிருக்காரு. அதோடு, நாம பா.ஜ.க.வை ஆதரிக்கணும்னும் ஆதரவாளர்கள்கிட்டே சொல்லியிருக்காரு. அவங்க ஷாக்காகி, என்னண்ணே.. கலைஞரைக் காப்போம்னு சொல்லிட்டு பா.ஜ.க.வை ஆதரிக்கணும்னு முடிவெடுக்குறீங்கன்னு கேட்க, 10 தி.மு.க. வேட்பாளராவது நம்மால தோத்தாதான் நம்ம பலம் தெரியும்னு சொல்லியிருக்காரு. தன்னோட பழைய ஆதரவாளர்களில் யார் யாரை தி.மு.க. சைடில் பூத் ஏஜெண்ட்டா போடுறாங்களோ, அவங்களை ஆஃப் பண்ணுங்கன்னும் அழகிரி சொல்லியிருக்காரு. பா.ஜ.க. தரப்பை அழகிரி ஆதரிக்கிறார்னு தெரிஞ்சதும், ராமநாதபுரம் பா.ஜ.க. வேட்பாளர் குப்புராம், அழகிரியை சந்திச்சி ஆதரவு கேட்டிருக்காரு.''

""மோடி-அழகிரி சந்திப்புக்கும் ஏற்பாடு நடந்துக் கிட்டிருக்குது. ஆனா அழகிரியின் நெருக்கமான ஆதரவாளர் களான மன்னன் போன்றவங்களே, அதெல்லாம் வேண் டாம்ணேன்னு சொல்றாங்களாம்.''

""அழகிரியை பலரும் சந்திக்கிறாங்கப்பா.. பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவங்களில் முக்கியமானவரு திண்டுக்கல் முத்துப்பாண்டியன். இவர் பசுபதிபாண்டியனோடு ரொம்ப நெருக்கமான பாதுகாப்பு ஆளா இருந்து, அங்கிருந்தபடியே சுபாஷ் பண்ணையார் குரூப்புக்குத் தகவல் சொல்லி, பசுபதி பாண்டியன் கொலைக்கு காரணமா இருந்தவரு. இவர் சில நாட்களுக்கு முன் அழகிரியை சந்திச்சாரு. அதற்கப்புறம், சித்திரை திருநாளையொட்டி அழகர் கோயிலிலுள்ள கருப்பண்ண சாமிக்கு கிடா வெட்டி பூசை செய்றதுக்காக  அதிகாலையில் அங்கே போனப்ப, பசுபதிபாண்டி யன் தரப்பு ஆட்கள் முத்துப் பாண்டியனை வெட்டிப் பொலி போட்டுட்டாங்க. பழிக்குப்பழி நடந்த இந்த கொலையால பண்ணையார் தரப்பு செம டென்ஷனாகியிருக்கு. இதுக்குப் பழிவாங்க அவங்க ஸ்கெட்ச் போடுவதால, எந்தத் தலை உருளப் போகுதோன்னு மதுரை ஏரியா மிரட்சியிலே இருக்குதுப்பா.''…

""தலைவரே.. .. மதுரை தகவல்களை சொல்லிடு றேன். அழகிரி தன்னோட ஆதரவாளர்களைக் கூட்டி ஆலோசனை நடத்தினார் னதும், தி.மு.க. மா.செ.வான தளபதி மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டத்தைப் புதன்கிழமையன்னைக்கு அவசரமா கூட்டுனாரு. நானும் அழகிரிக்கு விசு வாசமா இருந்தவன்தான். ஆனா, கட்சிக்கு அவரு துரோகம் செய்றப்ப எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? தேர்தல் செலவுக்கு பணம் வரலைங்கிறதை நக்கீரனில் கூட எழுதியிருந்தாங்க. உண்மைதான். நான் கடன் கேட்டிருக்கேன். அது வந்ததும் உங்க செலவுக்குத் தர்றேன். யாரும் கட்சிக்குத் துரோகம் செய்ய நினைக் காதீங்கன்னு சொல்லி யிருக்காரு. மதுரை தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் காசிநாதன் பேசுறப்ப, கலைஞர் கூட்டத்துக்கே புறநகர் மாவட்டத்தி லிருந்து வாகனங்கள் வரலை. இப்ப துரோகத் துக்கும் விசுவாசத்துக் குமான தேர்தலா இது இருக்குது. பூத் ஏஜெண்ட்டு களில் சந்தேகத்துக் குரியவங்களை லிஸ்ட் பண்ணியிருக்கோம். அந்த ஏரியாவில் மாற்று ஏஜெண்ட்டுகளையும் ரெடி யாக வைத்திருக்கிறோம்னு சொல்லியிருக்காரு.''

""பணம், ஒத்துழைப்பு இந்த இரண்டும்தான் தேர்தல் களத்தில் முக்கிய மான அம்சங்கள்.. பா.ஜ.க கூட்டணியில் அது எப்படி இருக்குதாம்?''

""கூட்டணிக் கட்சி களான தே.மு.தி.க, பா.ம.க., ம.தி.மு.க., கொங்கு மக்கள் தேசிய கட்சி போட்டி யிடுற தொகுதிகளுக்கு தலா 2சி ரூபாய் கொடுக் கிறதா பா.ஜ.க.வின் மோகன்ராஜூலு ஏற் கனவே உத்தரவாதம் கொடுத்திருந்தாரு. தேர் தல் தேதி நெருங்கியும் பணம் வரலை. கூட் டணிக்கட்சிகள் கேட்ட துக்கு, அவ்வளவு முடி யாது 50 எல் தரலாம்னு சொல்லியிருக்காரு. அதுவும் வந்தபாடில்லை. திரும்பக் கேட்டதற்கு, 25எல்தான்னு சொல்ல, கூட்டணிக் கட்சியினர் அதிர்ச்சியாயிட்டாங்க. அந்த அமவுண்ட்டும் வராத நிலையில், மோகன்ராஜூலுக்குப் போன் போட்டா அவர் எடுக்கிறதேயில்லையாம்.'' 

""சுத்தம்..'' 

""நரேந்திரமோடி 16-ந் தேதி வந்தப்ப கிருஷ்ணகிரியில் பா.ம.க. வேட்பாளர் கோ.க.மணி, சேலத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ், கோவை யில் ராதாகிருஷ்ணன்,  இவங்களை ஆதரிச்சுப் பேசினாரு. அடுத்த நாள் ஈரோட்டில் ம.தி.மு.க. கணேசமூர்த்தியை ஆதரித்துப் பிரச்சாரம். இதற்கான செலவையும் அந்தந்த கட்சிகளே ஏற்க ணும்னு பா.ஜ.க. தரப்பில் சொல்லிட்டாங்களாம். மோடியின் ஒரு கூட்டத்துக்கு 50எல் ஆனதாம். பிரதமர் வேட் பாளரா முன்னி றுத்தப்பட்டிருப் பவர் வரும் கூட்டத்திற்கு தேசிய கட்சி செலவு செய்யாமல் கூட்டணிக் கட்சிகளை செலவு செய்யச் சொல்வது எப்படி சரின்னு, கூட்டணிக்குள்ளே சலசலப்பு. இவ்வளவு செலவு செய்து கூட்டம் போட்டு, அதில் வேட் பாளரை ஏற்றினால், செலவுக்கணக்கு முழுவதும் அவர் கணக்கில் வந்துவிடும். அதனால சேலத்தில் சுதீஷோட தே.மு.தி.க.வின் 14 வேட்பாளர்களை யும் வரச்சொல்லிட்டாங்களாம். யார் கணக்கில் இதை எழுதுறதுன்னு தேர்தல் கமிஷன் குழம்பட்டும்னுதான் இந்த ஐடியாவாம்.'' 

""தமிழ்நாட்டைப் போல வேற எந்த மாநிலத்திலாவது தேர்தல் கமிஷன் இந்தளவு தண்ணி குடிச்சிருக்குமா?''

""ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தமிழகத்தில்தான் அதிகமா இருக்குன்னும், பணப்பட்டுவாடாவின் தலைநகரமா சென்னை இருக்குதுன்னும் தேர்தல் ஆணையக் கூட்டத்திலேயே பேசப்பட்டிருக்குது. பணம் கொடுப்பவர்களும் பணம் பெறுபவர்களும் தண்டனைக் குரியவங்கன்னும், 20-ந் தேதியிலிருந்து சிறப்பு பறக்கும்படை  தீவிரமா கண்காணிக்கும்னும் தேர்தல் ஆணையம் சொல்லியிருக்குது. சிக்கு பவர்கள் மேலே கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்லப்பட்டிருக்குது. ஈரோடு எம்.பி தொகுதியிலே இருக்கிற மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள கஸ்பாபேட்டையிலே அ.தி.மு.க விவசாய அணி மா.செ. அசோக்குமாரை அடிக்கடி ஆட்கள் வந்துபார்த்துவிட்டுப்போக, இதை கவனிச்ச தேர்தல் கமிஷன் பறக்கும்படை அதிகாரி நக்கீரன் அதிரடி சோதனை போட்டதில் 58லட்சத்து 28ஆயிரம் ரூபாய் சிக்கியது. அத்தனையும் 1000 ரூபாய் நோட்டுகள்.''

""அங்கேயும் நக்கீரன்தானா!''

""ஆமாங்க தலைவரே.. .. ரஜினி வீட்டுக்கு மோடி போனதால் தனக்கு வருத் தம்னு செய்தி போட்டு டேபிள் ஜர்னலிசம் பண்ணு றாங்கன்னு விஜயகாந்த் தன்னோட பிரச்சாரத் தில் பேசியிருக்காரு. போனமுறை நாம பேசி, நம்ம நக்கீரனில் வந்த தகவலைத்தான் அவர் சொல்றாரு. ரஜினியை மோடி சந்திக்கிற தகவலை பேப்பரில் பார்த்து டென்ஷனாகி, விழுப்புரம் ஹோட்டல் ரூமில் விஜய காந்த் என்னென்ன பேசினார்ங்கிற தையும், செல்போனை தூக்கி வீசியதை யும் நம்ம நக்கீரன் அப்படியே எழுதி யிருந்தது. இந்த விவரம் எப்படி வெளியே போனதுங்கிற அதிர்ச்சியில் தான் டேபிள் ஜர்னலிசம்னு விஜய காந்த் பேசியிருக்காரு.''

""நக்கீரனோட புலனாய்வு செய்தி கள் பற்றி இந்தியாவுக்கே தெரியும்.. விஜயகாந்த்துக்கும் தெரியும்.'' 

""நாம பேசிய விஷயத்தோடு, அந்த விழுப்புரம் ஹோட்டல் ரூமில் அதற்கப்புறம் என்ன நடந்ததுன்னும் சொல்லமுடியும்ங்க தலைவரே.. பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்குப் போன் செய்து, ரஜினி வீட்டுக்கு மோடி வருவது பற்றி எனக்கு ஒரு தகவல் கூட இல்லையேன்னு விஜயகாந்த் கேட்க, எனக்கும் தெரியாதுங்க..மாநில கட்சிக்குத் தெரியாம தேசிய லெவலில் ஏற்பாடு பண்ணியிருக் காங்கன்னு பொன்.ராதா சொன்னதோடு, நீங்க பொறுமையா இருங்க. நான் பேசிட்டு சொல்றேன்னும் சொல்லியிருக்காரு. அதற்கு விஜயகாந்த், நீங்க என்ன பேசுறது. 24-ந்தேதிக்குப்பிறகு நான்தான் பேசப்போறேன்னு சொல்லியிருக்காரு.''

""ரஜினியை சந்திச்ச மறுநாள், விஜயகாந்த்துக்கு மோடி போன் பண்ணி வருசப்பொறப்பு வாழ்த்து சொன்னதா தகவல் வந்ததே..''

""ஆமாங்க தலைவரே.. .. பொன்.ராதாகிருஷ்ணன் மோடிகிட்டே இதுசம்பந்தமா பேசியதையடுத்து, 14-ந்தேதி காலை 10 மணிக்கு மோடி போன் பண்ணி, விஜயகாந்த்துக்கு வருசப் பிறப்பு வாழ்த்து சொல்லி யிருக்காரு. பிரச்சாரத்தில் தீவிரமா இருக்கிற உங்க ளுக்கும் உங்கள் மனைவிக் கும் நாங்க கடமைப் பட்டிருக்கோம்னும் மோடி ஆங்கிலத்தில் பேச, விஜயகாந்த்தும் தேங்க்ஸ்னு சொல்லியிருக்காரு. தொடர்பிரச்சாரம் வேண் டாம். உடல்நலம் முக்கி யம். ஒருநாள் விட்டு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துக் குங்கன்னு விஜயகாந்த் தைக் கேட்டுக்கிட்ட மோடி, உங்க மனைவி கிட்டே போனை கொடுங்க வாழ்த்து சொல்லணும்னு சொல்ல, அவங்க பிரச் சாரத்தில் இருக்காங் கன்னு விஜயகாந்த் சொல்லியிருக்காரு. அவர்கிட்டே பிரேம லதாவின் நம்பரை வாங்கி, போன் செய்து மோடி வாழ்த்து சொன்னாராம். ரஜினி யை சந்திச்சதால் விஜயகாந்த் கோபமானதால்தான் இந்த வாழ்த்து போன். கூட்டணியில் இருக்கிற ராமதாஸ், வைகோ இவங்களுக்கெல்லாம் மோடி வாழ்த்து சொல்லலை. அவங்களுக்கெல்லாம் புதுவருசம் பொறக்கலைப் போல.. ..''

""தேர்தல் நேரத்தில் வாழ்த்தும் இருக்கும் வசவும் இருக்கும். நான் ஒரு தகவல் சொல்றேன். ஆளுங்கட்சியில் சங்கமமாகிவிட்ட அந்த நடிகை, இனி மீனவர்கள் ஹெலிகாப்டரில் போய் மீன்பிடிக்கலாம்ங்கிற ரேஞ்சுக்கு பேசினார். கொங்கு மண்டலத்தில் அவருக்கே வலை வீசியிருக்காங்க. மான்செஸ்டர் நகரத்தில் பிரச்சாரம் செய்யப்போனப்ப, அவருக்கு ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டிருந்தார் லோக்கல் ஆளுங்கட்சி பிரமுகரான காக்கும் கடவுளின் பெயர் கொண்டவர். ஹீரோ போல இருக்கும் அவரோட தோற்றத்தில் நடிகையும் சொக்கிப்போய், ஓட்டலுக்குப் போயிருக்கிறார். அங்கே பார்த்தால் ஊரின் முக்கிய தலைகள்னு 4 பேர் உட்கார்ந்திருக் காங்க. இவங்களுக்காகத்தான் உங்களுக்கு இங்கே ரூம் போட்டேன்னு ஆளுங்கட்சி பிரமுகர் சொல்ல, ஷாக்கான நடிகை அந்த 4 பேரை விரட்டிட்டு, அவனா நீன்னு லோக்கல் பிரமுகரைப் பார்த்து கேட்டுட்டு, வெளியே அனுப்பி கதவடைச்சிட்டாராம்.''



நாற்பதில் வெற்றி எனத் தொடங்கிய அ.தி.மு.க.வின் பிரச்சார சுருதி குறைந்து வரும் நிலையில், உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் கடைசிகட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன. 15 தொகுதிகளில் தி.மு.க வெற்றிபெறும் வாய்ப்பிருக் கிறதென உளவுத்துறை லிஸ்ட்டில் சொல்லப் பட்டிருப்பதால் அந்த 15 எம்.பி. தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 10 சி என பட்ஜெட் ஒதுக்கப்பட்டு, ஒரு ஓட்டுக்கு 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 1 லட்சம் வாக்காளர்களுக்கு வைட்டமின் தருவது என்ற அடிப்படையில் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 6 லட்சம் வாக்காளர்களுக்குத் தலா 1000 கொடுப்பதற்காக இந்த 15 எம்.பி. தொகுதிகளுக்கும் தலா 10சி என 60 சி ஒதுக் கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 தொகுதிகளில்  ஓட்டுக்கு 300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3சி என்பது பட்ஜெட். அதன்படி ஒரு எம்.பி.தொகுதிக்கு 18சி பட்ஜெட். இந்த பட்ஜெட் போக, தேர்தல் பணிகளைக் கவனிக்கும் கட்சிக்காரர்களுக்குத் தருவதற்காக ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 1சி என ஒரு எம்.பி. தொகுதிக்கு 6சியை அலாட் செய்துள்ளது ஆளுந்தரப்பு. சம்பந்தப்பட்ட இடங்களுக்கு இவை போய் சேர்ந்து விட்ட நிலையில், இரவு நேரங்களில் விநி யோகம் ஜரூராக நடக்கிறது.


 லாஸ்ட் புல்லட்!

தர்மபுரி தி.மு.க வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது, ஒருவரது இறுதி ஊர்வலம் அந்த வழியாகச் சென்றது. இறந்தவரின் உடலில் பா.ம.க கொடி போர்த்தப்பட்டிருந்தது. மாற்றுக்கட்சிக்காரர் என்றபோதும் பிரச்சாரத்தை நிறுத்தி, இறுதி ஊர்வலத்திற்கு வழிவிட்ட கனிமொழி, அங்கு கூடியிருந்த தி.மு.கவினரையும் பொதுமக்களையும் மவுன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி, ஊர்வலம் கடந்துசெல்லும்வரை அனைவரும் மவுனம் கடைப்பிடித்தனர்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் ஆட்டத்தைப்போலவே பெட்டிங்கும் விறுவிறுப்பானது. அதற்கு ஈடாக தமிழகத்தில் தேர்தல் பெட்டிங் விறுவிறுப்படைந்துள்ளது. ஜெயிக்கப்போவது அ.தி.மு.கவா, தி.மு.க.வா, பா.ஜ.க.வா, எந்தெந்த தொகுதியில் யார் ஜெயிப்பார்கள் என்றெல்லாம் பல கோணங்களில் பெட் கட்டப்பட்டு தொகை ஏறிக்கொண்டே இருக்கிறது.


 ஒரே நாளில் சோனியா-மோடி!


தமிழகத்தில் கூட்டணி அமைக்கமுடியாமல் போன காங்கிரசுக்காக ஏப்ரல் 16-ந் தேதி கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்ய வந்தார் சோனியா. தொகுதி வேட்பாளர் வசந்தகுமாருடன் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்களையும் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் மேடையேற்றியிருந்தார். காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்யும் நடிகர் கார்த்திக், சோனியா வருவதற்கு முன்பாக மோடியை விமர்சித்துப் பேசினார். சோனியா மேடையேறியதும் கார்த்திக்கை கீழே இறக்கி, பக்கவாட்டில் உட்காரவைத்துவிட்டனர். அப்செட்டான கார்த்திக் ஒன்றும் புரியாமல் விழித்தார். சோனியாவின் பேச்சில் தி.மு.க., அ.தி.மு.க. மீதான அட்டாக் இல்லை. பா.ஜ.க.வை விமர்சித்த சோனியா இலங்கைத் தமிழர்களுக்கும் மீனவர்களுக்கும் அதிக நன்மை செய்த கட்சி காங்கிரஸ்தான் என்றார். காங்கிரஸ் மீது மீனவர்கள் அதிருப்தியாக உள்ள நிலையில் இந்தக் கூட்டத்திற்கு மீனவர்கள் கணிசமான அளவில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

சோனியா வருகை தந்த அதே நாளில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் மோடி கிருஷ்ணகிரி, கோவை, சேலம் ஆகிய 3 இடங்களில் பேசினார். கிருஷ்ணகிரியில் பா.ம.க.வின் தர்மபுரி வேட்பாளர் அன்புமணி, கிருஷ்ணகிரி வேட்பாளர் ஜி.கே.மணி இருவரையும் ஆதரித்துப்பேசிய மோடி, காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களை கடுமையாக விமர்சித்தார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையும் என்றும் தமிழகத்திற்கான அனைத்து நலன்களும் நிறைவேற்றப்படும் என்றும் சொன்னதுடன், அன்புமணியையும் பாராட்டினார். அன்புமணியும் மேடையில் அடிக்கடி மோடியுடன் பேசியபடி இருந்தார். வெற்றிவாய்ப்பு பற்றிய நம்பிக்கையை அன்பு மணி தெரிவிக்க, மோடியும் ஊக்கப்படுத்தினார். அதுபோலவே சேலம் தே.மு.தி.க. வேட்பாளரான விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷையும் ஆதரித்துப் பேசினார் மோடி. அங்கும் காங்கிரஸ் மீது கடுமையான அட்டாக். கோவை பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் மோடி பிரச்சாரம் செய்தார்.

ad

ad