புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

கருத்துக் கணிப்புக்கள் பலவிதம்  கூடுதலான முடிவுகள்இந்தியாவில்  பா ஜ அதிக இடம் தமிழ்நாட்டில் அதிமுக அதிக இடம் /என் டி டி டி வி 
லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 275 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 111 இடங்களும் கிடைக்கும்
என்கிறது
என்.டி.டி.வி. கருத்து கணிப்பு. லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்னும் பல மாநிலங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் என்.டி.டி.வி. கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுக 22 தொகுதிகளிலும் திமுக 14 தொகுதிகளிலும் வெல்லும் என்று என்.டி.டி.வி. தொலைகாட்சியின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையில் இம்மாதத்தின் முதல்பகுதியில் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை என்.டி.டி.வி. வெளியிட்டுள்ளது.

: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் லோக்சபா தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என்கிறது என்.டி.டி.வி. கருத்து கணிப்பு. மேலும் உத்தரப்பிரதேசத்தில் 51 இடங்களை பாஜக கைப்பற்றும் என்கிறது அக்கணிப்பு. லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கருத்து கணிப்புகளை என்.டி.டி.வி. நேற்று இரவு வெளியிட்டது. தேசிய அளவில் பாஜக அணியே ஆட்சி அமைக்கும் என்கிறது அக்கணிப்பு. தமிழகத்தில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் கூறுகிறது அது. நாட்டிலேயே அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இக்கணிப்பு



2014 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு: மாநிலவாரியாக முடிவுகள்-அதிமுக 27 இடங்களில் வெல்லும்!
டெல்லி: வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுக, முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி. மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அடுத்த ஆட்சியை தீர்மானிக்கப் போவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி CVoter ஆகியவை இணைந்து நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நடத்திய கருத்துக் கணிப்பின் விவரம்: அடுத்த தேர்தலில் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது.

ad

ad