புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014







தொகுதியில் இருக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ வாக்காளர்களில் பெரும்பாலானோர் சூரியத் தரப்பை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர். காரணம் கேட்டபோது ‘""எப்போதுமே சிறுபான்மை மக்களுக்காக, கலைஞர்தான் ஆதரவுக்குரல் கொடுக்கிறார்''’ என்கிறார்கள். 

பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. போட்டியிட்டபோதும், பா.ம.க. விலிருக்கும் ஆண்கள் வாக்கு தி.மு.க. பக்கமே சரிவதை நம்மால் உணர முடிந்தது. காரணம் தி.மு.க. வேட்பாளர் வன்னியர். அதேபோல பா.ம.க. குடும்பப் பெண்களின்
வாக்கோ, தி.மு.க., அ.தி.மு.க. என பிரிகிறது. 

விருத்தாசலம், திட்டக்குடி, கடலூர் சட்டமன்றத் தொகுதிகளில் தலித், வன்னியர் அல்லாத பொதுத் தரப்பினரின் ஆதரவு தே.மு.தி.க.வுக்கு கணிசமாகக் கிடைக்கிறது.

தேவனாம்பட்டில் மீனவர் பகுதிக்கு போனபோது இலைத்தரப்பின் மீது கோபமாக இருந்த சுதாகரைப் பார்க்க முடிந்தது. ஏன் என்று விசாரித்த போது ""நான் அ.தி.மு.க. வெறியனுங்க. அப்படிப்பட்ட நான் என் மகளுக்கு பால்வாடி டீச்சர் வேலை வேணும்னு எங்க கவுன்சிலர் மூலமா மந்திரி எம்.சி. சம்பத்தைப் பார்த்தேன். கட்சிக்காரன்னுகூடப் பார்க்காம ஒண்ணேமுக்கா லட்சம் வேணும்னு கேட்டார். சரி பணம் புரட்டிட்டு வர்றேன்னு வந்தேன். அதுக்குள்ள யாருக் கிட்டயோ பணத்தை வாங்கிக் கிட்டு வேலையைப் போட்டுக் கொடுத்துட்டார். இந்த ஏமாத் தத்தை என்னால் தாங்க முடியலை. அதனால் தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்டு என் கோபத்தை தணிச் சிக்கப் போறேன்''’என்றார் காரமாக.

நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த கீழ் அழிஞ் சாம்பட்டு பட்டதாரி இளைஞர் பாபுவோ ""எங்க நண்பன் ஒருத்தன் ராணுவத்தில் இருக்கான். அவன் அடிக்கடி, நம்ம நாடு மோசமா போய்க்கிட்டிருக்குன்னு சொல்வான். நம்ம எல்லையில் அந்நிய நாட்டுக்காரன் புகுந்தால் மேலே அனுமதி கேட்டுத்தான் சுட முடியும். அனுமதி கிடைக்கிறதுக்குள்ள அவன் நம்ம ஆளுங்களை சுட்டுட்டுத் தப்பிச்சிப் போய்டுவான். அதேசமயம் நம்ம ஆளுங்க சுடப்பட்டு இறந்தா, அதை மூணுநாள் கழிச்சிதான் ராணுவம் அறிவிக்கும் என்பான். இதையெல்லாம்  கேட்டு மனம் வருந்திய நாங்க, நோட்டோவுக்கு போடறதா முடிவு பண்ணி யிருக்கோம்''’என்றார். 

அவரவருக்கும் ஒரு காரணம்.

ad

ad