புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

பொலன்னறுவை அரலகங்விலயில்

பாசன நீரோடையில் மூழ்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

2 சிறுவர்கள், 1 சிறுமி, 2 ஆண்கள், 4 பெண்கள் பலி
20 பேருடன் சென்ற சிறிய உழவு இயந்திரம் பாதையை விட்டு விலகி விபரீதம்
புத்தாண்டை முன்னிட்டு உறவினர்கள் வீட்டுக்குச் சென்று திரும்புகையில் சம்பவம்

பொலன்னறுவை அரலகங்வில பகுதியில் கைஉழவு இயந்திரமொன்று (Land Master) அளுத்ஒய இஸட். டி. நீரோடையில் விழுந்து 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு உறவினர் களின் வீடுகளுக்குச் சென்று பகல் விருந்துபசாரத்தி லும் கலந்து கொண்ட பின்னர் புதுவருட விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு களிப்பதற்காக சுமார் 20 பேர் சிறிய உழவு இயந்திரத்தில் பயணித்துள்ளனர்.
நேற்றுப் பகல் சுமார் 1.20 மணியளவில் அரலகங்வில பகுதியில் மகாவலியிலிருந்து பாசன நீர் செல்லும் அளுத்ஒய இஸட். டி. நீரோடைக்குள் லேண்ட் மாஸ்டர் விழுந்து விபத்துக்குள்ளாகிய போதே 9 பேரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களிடையே ஒரு சிறுமியும் இரு சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.சுமார் 20 பேர் நிசவதலந்தவில்
இருந்து அளுத்ஒயாவுக்கு கை உழவு இயந்திரத்தில் பயணம் செய்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மகாவலிக்கு நீர் பாய்ச்சும் சுமார் 28 அடி ஆழமான பாசன ஓடைக்கு அருகில் பயணித்த கை உழவு இயந்திரம் வாவியினுள் கவிழ்ந்துள்ளது.
நீரில் மூழ்கியிருந்த 8 பேர் பலத்த பிரயத்தனத்துடன் மீட்கப்பட்டதோடு 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அரலகங்வில மற்றும் பொலன்னறுவை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் 7 பேரின் சடலங்கள் அரலகங்வில ஆஸ்பத்திரியிலும் 2 பேரின் (சிறுவர்கள்) சடலங்கள் பொலன்ன றுவை ஆஸ்பத்திரியிலும் வைக்கப் பட்டுள்ளன.
இறந்தவர்களிடையே 2 ஆண் களும் 4 பெண்களும் 2 சிறுவர்களும் ஒரு சிறுமியும் அடங்குகின்றனர். விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படும் இஸட். டி வாவியில் அடிக்கடி கால்நடைகள் கூட விழுந்து இறப்பதாக அறிய வருகிறது.
சம்பவம் குறித்து அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ad

ad