புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

இன்டர்போலினால் தேடப்பட்டு வரும் புலி உறுப்பினர்களுக்கு 11 நாடுகள் அடைக்கலம்!-சிங்கள ஊடகம்
சர்வதேச பொலிஸாரான இன்டர் போலினால் தேடப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு 11 நாடுகள் அடைக்கலம் வழங்கி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்டர் போலினால் 299 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிகப்பு சமிக்ஞை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் அதிகளவான புலி உறுப்பினர்களுக்கு கனடா அடைக்கலம் வழங்கியுள்ளது.
கனடாவில் 78 பேருக்கும்,  ஜெர்மனியில் 48 பேருக்கும்,  இத்தாலியில் 25 பேருக்கும்,  பிரான்ஸில் 43 பேருக்கும்,  நெதர்லாந்தில் 31 பேருக்கும்,  நோர்வேயில் 13 பேருக்கும்,  அமெரிக்காவில் 11 பேருக்கும்,  பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்தில் 70 பேருக்கும் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளில் 90 பேருக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திவயின பததிரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad