புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014




பெரம்பூர் தொகுதியில் மகாகவி பாரதிநகரில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம், "கருத்துக்கணிப்பு' என்றதும் டென்ஷனாகி தேர்தல் கமிஷனுக்கு போன் போட்டு தேர்தல் கமிஷனர் பிரவீண் குமாருடன் பேச முயன்றார். ""எந்த கட்சியிலிருந்து காசு வாங்கிட்டு சர்வே எடுக்கிறீங்க'' என கோபப்பட்டவர் நமது நக்கீரன் அடையாள அட்டையை காண்பித்ததும் கூலாகி ""என் ஓட்டு மோடிக்குதான்'' என்றார்.

திரு.வி.க.நகரில் சர்வேக்கு பதில் சொன்ன ஏழை முஸ்லிம் பெண்மணி, ""ஏதோ பாபர் மசூதியாம் இடிப்பாங்களாம் அதுக்காக ஓட்டுப் போட சொல்றாங்க. எனக்கு தெரிஞ்சதெல்லாம் என் புள்ளைங்களோட பசிதான். அதை போக்க உதவுறது அம்மா உணவகம்தான்'' என்றார்.

ad

ad